களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை அனைவராலும் புறந்தள்ளப்பட்ட, பாவப்பட்ட வைத்தியாசாலையாக காணப்படுகின்றது.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை அனைவராலும் புறந்தள்ளப்பட்ட, பாவப்பட்ட வைத்தியாசாலையாக காணப்படுகின்றது. பலதரப்பட்டவர்கிளிடம் பலதரப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து சோர்வடைந்துள்ளேன்  என வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் குறைநிறைகளைக் கேட்டறிவதற்கு சுகாதார சேவைகள் பிரதியமைச்சர் பைசல் காசீம் அவர்கள் திடிர் வியத்தினை மேற்கொண்டு வருகைதந்திருந்தார் அவர் முன்னிலையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடரந்து உரையாற்றுகையில்
அனைவராலும் புறந்தள்ளப்பட்ட வைத்தியாசலையாக களுவாஞ்சிகுடி வைத்தியசாலை காணப்படுகின்றது கடந்த காலத்தில் ஒருசிலருடன் இணைந்து வேலை செய்ததனால்தான் இந்த ஜெய்கா திட்டத்தினையும் நான் பெற்றுக் கொண்டேன்
உண்மையில் பிரதியமைச்சர் அவர்கள் இந்த பாவப்பட்ட வைத்தியசாலையின் நிலமையினை கருத்திற்கொண்டு இங்கு வருகைதந்தமையையிட்டு நான் மனமகிழ்ச்சியடைகின்றேன்.
 வைத்தியசேவை என்பது எந்தவித மாற்றுக்கருத்திற்கும் இடமில்லாமல் ஒருநாட்டின் ஒரு மனிதனை சகமனிதனாக உள்வாங்கிக் கொண்டு முடிந்தளவு சமமான சேவையை அந்தநாட்டு குடிமகனுக்கு கொடுக்கவேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பாகும்.  அந்தபொறுப்பைத்தான் நாங்கள் எல்லோரும் முன்னெடுத்து வருகின்றோம். ஆனால் அபிவிருத்தி அடைந்துவருகின்ற நாடுகளில் குறிப்பாக எமது ஆசிய நாடுகளில் இந்த நிலை மறுக்கப்பட்டு இருக்கின்றது. அல்லது வேறொரு விதத்தில் மாற்றப்பட்டிருக்கின்றது என்ற உண்மையை அனைவரும் உணர்ந்தவர்களாகத்தான் இருக்கின்றோம். அதற்குள்ளும் எவளவு தூரம் எமது செயற்பாடுகளை முன்னிறுத்தி அந்த சேவைகளை செய்யப்போகின்றோம் எனபதே இங்குள்ள விடயமாகும்.
  இவ்வாறான நிலையில் எமது மக்களை நான் பவப்பட்ட மக்களாகத்தான் பார்க்கின்றேன். இந்த பிரதேசத்தில் காணப்படுபவர்கள் அனேகமானோர் கடந்தகால யுத்தத்தினாலும், வறுமையினாலும் பாதிக்கப்பட்வர்கள் அவர்களுக்கு கிடைத்திருக்கின்ற ஒரேயொரு பிடிமானம் இந்த பகுதியில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை மாத்திரமே. நாங்கள் மற்றய வைத்தியசாலைகளுடன் ஒப்பிடும் பொழுது எமக்கு கிடைத்திருக்கின்ற வளங்களை வைத்துக் கொண்டு மிகவும் கூடுதலான சேவை செய்து கொண்டு வருகின்றோம்.
  உண்மையில் இந்த வைத்தியசாலையை அமைச்சர் பார்வையிட்ட பொழுது நான் ஒவ்வொரு நாளும் படும்வேதனையில் பாதிவேதனையை அவர் பட்டதனை நான் உணரக்கூடியதாக இருந்தது. உண்மையில் இது அவருடைய வேலையே இல்லை இதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு பொருத்தமானர்கள் அதிகாரிகள் தான் என்பதனை அவர் சுட்டிக்காட்டியிந்தார். அது ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மையாகும்.
இவ்வாறானோதோர் நிலையில் பலதரப்பட்ட அரசியல் வாதிகள்,அதிகாரிகளிடம் எமது வைத்தியசாலையின் குறைபாடுகளுக்கான கோரிக்கைகளை வைத்து களைப்படைந்தவனாகவும் இன்று தங்களின் செயற்பாட்டில் நம்பிக்கை கொண்டவனாக  வைத்தியாசலையில் காணப்படும் சில குறைபாடுகளை தங்கள் முன்வைக்கலாம் என நான் நினைக்கின்றேன்.
இந்த வைத்தியசாலை 500 மில்லியன் ரூபாய் செலவில் ஜெய்க்கா திட்டத்தின் மூலம் கடந்தவருடம் கட்டி முடிக்கப்பட்டு கௌரவ ஜனாதிபதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டம் வருவதற்கு முன்பிரந்த வைத்தியசாலையால் வழங்கி வந்தசேவையின் அளவே தற்போதும் எம்மால் வளங்கக் கூடியதாகவுள்ளது. பௌதிக வளப்பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டாலும் மனிதவளபற்றாக்குறை இங்கு காணப்பட்டுவருகின்றது அந்த வகையில் வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறை மிகவும் முக்கியமாதொன்றாகும்.
கிழக்கு மாகாணத்திற்கு கிடைத்த சாபக்கேடு என்னவென்றால் அமைச்சினால் வெளியிடப்படும் இடமாற்றப்பட்டியிலில் வைத்திய நிபுணர்களுக்கான வெற்றிடங்கள் காட்டப்படுவதில்லை இதனை அமைச்சர் இலகுவாக கையாளவேண்டும்.
30 வருடங்கள் செய்யப்படாமல் இருந்த ஆளணி மீளாய்வு வடகிழக்கில் செய்யப்பட்டு வடக்கில் அதற்கான அனுமதி கிடைத்துள்ளது கிழக்கு மாகாணத்தின் விபரம் சம்பள ஆணைக்குழுவிடம் அனுமதிக்காக தேங்கிக்கிடக்கின்றது. இதனை செய்தால் எமது வைத்தியசாலைக்கு 15 வைத்தியநிபுணர்கள் நியமிக்கப்படுவார்கள். எனவே வைத்தியநிபுணர்கள்,வைத்தியர்கள்,தாதிய உத்தியோகத்தர்,மருந்து கலவையாளர்கள் எமது வைத்தியசாலைக்கு பற்றாக்குறையாக உள்ளார்கள்
மற்றும் வைத்தியர்கள், வைத்திய நிபுணர்களின் தங்குமிட வசதி என்பன பற்றாக்குறையாகவுள்ளது இதனால் இவர்கள் வரமறுக்கின்றனர். இதனையும் நிவர்த்தி செய்தரவேண்டும். ஒவ்வொரு டிசம்பர் மாதங்களில் எமது வைததியசாலை மிகவும் தாள்வதுண்டு இதனால் எமது மலசல கூடங்கள் நிரம்பிடும் இதனால் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடக்க வேண்டியேற்படுகின்றது. கழிவுகளை சுத்திகரிக்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும்;.
மற்றும் நாங்கள் தற்போதுவரைக்கும் குடிநீர் பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருகின்றோம் எமது வைததியசாலை கிணற்று தண்ணீரை அருந்த முடியாது எனவே நீர்வழங்கல் வடிகால் அமைப்புச்சபையினூடாக நீரிணைப்பினை பெறுவதாக இருந்தால் ஒரு மில்லியன் ரூபாய் தேவைப்படும் இதனையும் தந்துதவவேண்டும். மற்றும் ஜெய்க்க திட்டத்தினால் விடுபட்டுபோன வேலைகளைச்செய்வதற்கு இரண்டு மில்லியன் ரூபாய் தேவைப்படுகின்றது. என்பதனையும் தங்களுக்கு முன்வைக்கின்றேன
எனவே எமது அமைச்சர் அவர்கள் இதற்கு தகுதியானவர்களை உள்வாங்கிக்கொண்டு சிறந்த ஆளுமையுடன் இவ்வைத்தியசாலையின் குறைபாடகளைத் தீர்த்து வைப்பதற்குரிய நடவடிக்கைகளை உறுதியாக முன்னெடுப்பார் என நான் நம்புகின்றேன்

Related posts