காரியாலயங்களுக்கு பொதுமக்களின் வரவைக்குறைக்க புதியயுக்திகள்.சம்மாந்துறை கொரோனாதடுப்பு வழிநடத்தல்குழுக்கூட்டத்தில் முடிவு

அரச காரியாலயங்களுக்கு வருகின்ற பொதுமக்களின் எண்ணிக்கையினை குறைத்து மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை நிவர்த்திசெய்யும் பொருட்டு மாற்றுமுறைமைகளை ( உ-ம். ஈமெயில் தொலைபேசி…) ஏற்படுத்துவதோடு மக்களுக்கு பகிரங்கப்படுத்தலும் வேண்டும்.
 
இவ்வாறான தீர்மானத்தை சம்மாந்துறைப்பிரதேச  கொரோனாத்தடுப்பு வழிநடத்தல் குழு நிறைவேற்றியுள்ளது.
 
இக்கூட்டம் சம்மாந்துறைப்பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா தலைமையில் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
கூட்டத்தில் சம்மாந்துறை சுகாதாரவைத்திய அதிகாரி பிரதேசசபைத்தவிசாளர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
 
அங்கு மேலும்  சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
அரச மற்றும் தனியார் சகல நிறுவனங்களுக்கு வருகின்ற சேவைநாடிகள் அனைவரினதும் பெயர் விபரங்கள் பதியப்படுவதோடு அவர்களது உடல் வெப்பநிலையும் பரிசோதிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
சம்மாந்துறைக்குள் வியாபாத்திற்காக வரும் சகல வியாபாரிகளதும் விபரம் பதியப்பட்டு தொற்றுநீக்கம் மற்றும் உடல்வெப்பநிலை சோதிக்கப்பட்ட பிற்பாடே அனுமதிக்கப்படவேண்டும். 
 
கம்பஹா குருநாகல் கொழும்பு களுத்துறை போன்ற வைரஸ் தாக்கம் அதிகமுள்ள  வெளியூரிலிருந்து எமது ஊரிற்கு வருகைதரும்  பொதுமக்கள் தங்களது குடும்ப மற்றும் ஊர் நலன்கருதி தங்களை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகருக்கும் அத்துடன் பொலிஸ் நிலையத்திலும் அல்லது தங்களது பிரதேச கிராம சேவையாளரிடமோ உடனே பதிவு செய்யவும்.(உள்ளுர் பொதுமக்களும் இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தகவல் வழங்கவும்)தங்களுக்குரிய சுய தனிமைப்படுத்தல் வசதிகளை தாங்களாகவே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்..
 
பள்ளிவாயல்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சுகாதார அமைச்சு என்பன வெளியிடும் கொவிட்-19 தொடர்பான சுற்றுநிருபங்களின் பிரகாரம் சம்மாந்துறை உலமாசபை மற்ம் மஜ்லிசுல் சூறாவுடன் கலந்தாலோசித்து   சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையானது சுகாதாரவைத்தியஅதிகாரிக்கு அறிக்கை சமர்ப்பித்தல வேண்டும்.
 
யாசகர்களின் வருகையினை தடைசெய்தல்.
கருத்தரங்கு கூட்டம் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
பொது வெளிகளில் முகக்கவசம் அணியாமல் விடுவதும் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காமல் இருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

Related posts