கிழக்கில் 2,000 ஆசிரிய வெற்றிடம் ! அடுத்த வருடத்தில் 17 பாடசாலைகள் தரமுயர்த்தப்படும்

கிழக்கு மாகாணத்தில் அடுத்த வருடத்தில் (2019),  17 பாடசாலைகள் தரமுயர்த்தப்படுமென, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம      தெரிவித்தார்.

 கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே  அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தாம் ஆளுநராக பதவியேற்ற போது,கல்வி மட்டத்தில் கிழக்கு மாகாணம்  9 ம் இடத்தில் காணப்பட்டதாகவும், தற்போது கல்வி ரீதியான அபிவிருத்தியை இலக்காக கொண்டு பல்வேறு வகையான மாற்றங்கள்  மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

க.பொ.த.சாதாரண தர பெறுபேறுகளின் பிரகாரம், இம்முறை 6ம் இடத்தை கிழக்கு மாகாணம் பெற்றுக்கொள்ள கூடும் என்பது தமது எதிர்பார்ப்பாக அமைவதாகவும், கிழக்கு மாகாண ஆளுநர் இதன் போது தெரிவித்தார்.

கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பாடங்களை போதிப்பதற்கான ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்து நிலவுவதாகவும், 2000ஆசிரியர்களுக்கான வெற்றிடம் காணப்படுவதாகவும் அரசாங்கத்தின் அனுமதி கிடைக்கப்பெறுமாயின் வெகு விரைவில் அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts