கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் கிளை அலுவலகம் பெரிய கல்லாற்றில்

இ.சுதா
 
கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் கிளை அலுவலகம் பெரிய கல்லாற்றில் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.
 
கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தேர்தல் பிரசார கிளை அலுவலகத் திறப்பு விழா நிகழ்வு பெரிய கல்லாற்றில் இன்றைய தினம் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி பொன். சுரேஸ் தலைமையில் நடைபெற்றது.
 
மட்டு மாவட்டத்தில் கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் சார்பில் உதய சூரியன் சின்னத்தில் இலக்கம் மூன்றில் போட்டியிடும் பொறியியலாளர் கே.சிவாகரனை ஆதரிக்கும் நோக்கில் திறந்த வைக்கப்பட்ட அலுவலகத் திறப்பு விழா நிகழ்வில் கிழக்கு தமிழர் ஒன்றியத் தலைவரும் சட்டத்தரணியுமான த.சிவநாதன் மற்றும் கல்லாறு சர்வார்த்த சித்தி விநாயக ஆலய வண்ணக்கர் மூ.மன்மதராசா மற்றும் அண்மைக் கிராமத்திலுள்ள பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
 
 

Related posts