கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் பாடசாலைகளுக்கு நிதி

கிழக்கு மாகாணப் பாடசாலைகளைத் தயார்படுத்தும் பொருட்டு, கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால்  பாடசாலைகளுக்கு நிதி வழங்கப்பட்டது.

கொவிட் 19 வைரஸ் தொற்று நோய் காரணமாக விடுமுறை வழங்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண பாடசாலைகளை மீளத் திறக்கும் திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாணப் பாடசாலைகளைத் தயார்படுத்தும் பொருட்டு, கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்  பாடசாலைகளுக்கு நிதி வழங்கியுள்ளது.

இந்நிதிகளைப் பயன்படுத்துவது தொடர்பில், கிழக்கு மாகாணக்  கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர், சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களையும் அறிவுறுத்தியுள்ளார்.

பாடசாலைகளுக்கான இந்த நிதிகள், சம்பந்தப்பட்ட 17 வலயக்  கல்வி அலுவலகங்களினூடாக, கிழக்கு மாகாண பாடசாலைகளின் வங்கிக் கணக்குக்கு தனித்தனியாக வைப்பிலிடப்பட்டுள்ளன.

இதனால், கிழக்கு மாகாணத்திலுள்ள சுமார்  457 ஆரம்பப் பாடசாலைகளும்,657 இரண்டாந்தரப் பாடசாலைகளும் நன்மையடைந்துள்ளன. பாடசாலைகளுக்கு தலா 1,250 ரூபாய் முதல் 26,000 வரையும்  நிதிகள் வழங்கப்பட்டுள்ளன.  

பாடசாலைகளைத் தயார்படுத்துவது தொடர்பில், கல்வி அமைச்சால்  வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபம்,வழிகாட்டல், ஆலோசனைகளுக்கு அமைய, நீர், கைகழுவும் திரவம், ஏனைய சுகாதாரத் தேவைப்பாடுகளைப்  பூர்த்தி செய்து கொள்வதற்காக குறித்த நிதிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக மாகாண கல்விப்பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கையில்,கைகளைக் கழுவதற்காக சவர்க்காரத்திரவம்  பயன்படுத்துவதோடு,பாடசாலைச் சூழல் தொற்று நீக்கம் செய்யப்படவேண்டுமெனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts