கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.டி.எம்.நிசாம் சற்று முன் நியமனம்

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக  எம்.டி.எம்.நிசாம்  கிழக்கு மாகாண ஆளுநர்   MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்களால்  சற்று முன் நியமனம்.

கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்படும்  நியமனங்களை  பார்க்கும்போது அரசியல் நோக்கத்தை பின்னணியில் கொண்டதாக இருக்கின்றதோ என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர் . அத்தோடு இந்த நியமனமானது ஜனாதிபதிக்கும்  ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்களுக்கும்  முஸ்லீம் சமூகத்தின் மத்தியில் நல்லதொரு அபிப்பிராயத்தை உயர்த்தும் ஒரு நடவடிக்கையாக   கருதப்படுகின்றது .

எம்.டி.எம்.நிசாம் இதற்கு முன்னும்  கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக கடமையாற்றியபோது    சற்றும் எதிர்பாராத வகையில் முன்னாள் ஆளுநர் ரோஹித போகலகம அவர்கள்   எம்.கே.எம். மன்சூர் அவர்களை    கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக    நியமித்தார்.

 தமிழ் சமூகத்தில் நல்லதொரு புரிந்துணர்வு கொண்ட பணிப்பாளராக  எம்.கே.எம். மன்சூர்  அவர்கள் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 இலங்கையிலே மூவினமும் கணிசமாக வாழுகின்ற கிழக்கு மாகாணத்தில் தற்போது நடைபெறுகின்ற இந்த நிகழ்வுகள் அண்மையில்   இலங்கையில்   இடம்பெற்ற   அரசியல் இழுபறியின்  பிரதிபலிப்போ   என்ற ஐயப்பாடுகள் மக்கள் மத்தியில் தோன்ற ஆரம்பித்துள்ளது.

Related posts