கிழக்கு வலயக்கல்வி பணிப்பாளர்கள் தாய்லாந்தில் நடைபெறும் செயலமர்விற்கு சுற்றுப்பயணம்

கிழக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து வலயக்கல்வி பணிப்பாளர்கள் தாய்லாந்து நடைபெறும் கல்விப்பயிற்ச்சி செயலமர்வில் கலந்து கொள்வதற்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ளுகின்றார்கள்.

“சர்வதேச கல்விபோக்கும்;புதிய கல்விக்கொள்கையும்” எனும் செயற்திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட ஐந்து வலயக்கல்வி பணிப்பாளர்கள் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம்  வெள்ளிக்கிழமை(31) இரவு கட்டுநாயக்க விமானநிலையத்தில் இருந்து தாய்லாந்து நாட்டுக்கு பயணம் மேற்கொள்கின்றார்கள்.

கிழக்கு மாகாண கல்வித்திணைக்கள பரிபாலனத்தின் கீழுள்ள கிண்ணியா வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.நளீம், திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம், தெஹியத்தகண்டி வலயக்கல்வி பணிப்பாளர் தருமசேன, கந்தளாய் வலயக்கல்வி பணிப்பாளர் அபநாயக்க, திருகோணமலை வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர் றுவான்சேன ஆகிய வலயக்கல்வி பணிப்பாளர்கள் இவ்வாறு தாய்லாந்து நாட்டில் நடைபெறும் கல்விப்பயிற்சியில் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

முதலாம் திகதி முதல் (1-7) ஏழாம் திகதி வரையும் தாய்லாந்தில் தரித்து நின்று பயிற்சி செயலமர்வில் கலந்துகொள்கின்றார்கள் என கிழக்கு மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் எஸ்.மனோகரன் தெரிவித்தார்.

Related posts