குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முதல் கட்ட ஆய்வு அறிக்கை

வவுனதீவு அபிவிருத்தி அமைப்பின் உதவி ஊடாக மட்டக்களப்பு
மாவட்டத்தில் வவுனதீவு பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள
30 பாடசாலைக்கான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை
ஏற்படுத்திக் கொடுக்கும் முதல் கட்ட ஆய்வு அறிக்கையினை மாவட்ட
செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய மாணிக்கம் உதயகுமார்
அவர்களுடன் வவுனதீவு அபிவிருத்தி அமைப்பின் மாவட்ட
இணைப்பாளர் திருமதி.தவராஜா தலைமையில் இன்று 11 மணி
அளவில் மாவட்ட செயலாளரின் கலந்துறையாடல் மண்டபத்தில்
நடைபெற்றது.
 
வவுனதீவு பிரதேசத்திலே குறிப்பாக 30 பாடசாலைகளில் நீர்
மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு
தீர்மானிக்கபட்டது.இத்திட்டத்தில் தொடர்ச்சியாக
நடைமுறைப்படுத்துவதில்
ஏற்படும் சிக்கல் தொடர்பாக சம்மந்தபட்ட திணைக்களங்களுடன்
கலந்துறையாடப்பட்டது.
 
குறிப்பாக மட்டக்களப்பு மேற்குக்கல்வி வலயத்தில் சில
பாடசாலைகளில் தளவாய் போன்ற பாடசாலைகளில் நீர் இன்றி
பாடசாலைகளில் மாணவரின் வருகை குறைவடைந்து வருவது இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.இதற்கு நீர் வழங்கல் வடிகால் சபைமுழுமையாக ஒத்துளைப்பை வழங்கி இப்பிரதேசங்களுக்கு சுத்தமான
நீர் வழங்குவதற்கான நடைவடிக்கை எடுக்கவேண்டும் என்றும்
கூறப்பட்டது.சில பாடசாலைகளில் நவீன மலசலகூடங்கள்
அமைத்துகொடுக்கப்பட்டிருந்தும் அங்கு நீர் இன்மையால்
பாவனைக்கு உட்படுத்தபடமுடியாது என்பது அவதானத்திற்கு
கொண்டுவரப்பட்டது.
 
இந்த வவுனதீவு அபிவிருத்தி அமைப்பு எனும் தனியார்
நிறுவனம் இதற்கான நிதிஉதவியினை மாவட்ட அரசாங்க
 
அதிபரின் ஆலோசனையுடன் பிரதேச செயலாளரின்
அனுசரனையுடனும் இத்திட்டத்தினை முன்னேடுத்து செல்வதற்காக
தீர்மானிக்கபட்டுள்ளது.
 
மட்டக்களப்பு மாவட்டத்திலே 398 சிறு குளங்கள்
காணப்படுவதாகவும் 5 பெரிய குளங்களும் 21நடுத்தர குளங்களும்
காணப்படுகின்றது. இதனை ஆளப்படுத்தி புணரமைக்கும்
செயற்திட்டங்களை அரசசார்பற்ற நிறுவனங்கள்
முன்னேடுப்பதற்கு நடைவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்க
அதிபர் மாணிக்கம் உதயகுமார் கேட்டுக்கொண்டார்.

Related posts