கொவிட்-19 வைரசுக்கெதிரான நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்பெறச் செய்யும் வகையில் ‘இம்முனோ வூஸ்டர்’ எனும் ஆயுர்வேத மருந்து பொதிகள் வழங்கும் நிகழ்வும் விழிப்புணர்வும்

(றாசிக் நபாயிஸ்)
————————————
 
 
கொவிட்-19 வைரசுக்கெதிரான நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்பெறச் செய்யும் வகையில் ‘இம்முனோ வூஸ்டர்’ எனும் ஆயுர்வேத மருந்து பொதிகள் வழங்கும் நிகழ்வும் விழிப்புணர்வும் அம்பாறை அக்கரைப்பற்று 241ஆவது இராணுவ படை முகாமில் இன்று (2020/10/16) இடம் பெற்றது.
 
கொரோன வைரஸின் தாக்கம் தற்போது நாட்டில் 02ஆவது அலையாக தலை தூக்கிவருவதனையிட்டு, சுதேச வைத்திய மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமுதாய சுகாதார இராஜங்க அமைச்சர் சிசிற ஜயகொடியின் ஆலோசனையின் கீழ் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
 
நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் மற்றும் நிந்தவூர் ஆராய்ச்சி வைத்தியசாலையின் ஊழியர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, அக்கரைப்பற்று 241ஆது இராணுவ முகாம் லெப்டினன் கேணல் சமிந்த புஸ்பராஜிடம் ஆயுர்வேத மருந்து பொதிகளை வழங்கி வைத்தனர்.
 
இந்நிகழ்வில், ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான ‘ஹெல ஒசு உயன’ எனும் மருத்துவ தாவரங்களை பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மருத்துவ தாவரம் ஒன்றும் இதன் போது ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளரினால் கையளித்து வைக்கப்பட்டது.
 
சுகாதார சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் அணுசரணையுடன் நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை இணைந்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய ஆயுர்வேத மருந்து வகைகளை அம்பாறை மாவட்ட மக்கள் மத்தியில் பிரபல்லியப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
இந்நடவடிக்கையின் பொருட்டு அரச திணைக்களங்கள், வைத்தியசாலைகள், இராணுவ முகாம்கள் மற்றும் பொது நிறுவனங்களில் ‘இம்முனோ வூஸ்டர்’ எனும் ஆயுர்வேத மருந்து பொதிகள் வழங்கி வருவதுடன் அது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையையும் அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
 
‘இம்முனோ வூஸ்டர்’ எனும் ஆயுர்வேத மருந்தானது, இஞ்சி, கொத்தமல்லி, மரமஞ்சல், சித்தரத்தை போன்ற இயற்கை மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
 
 

Related posts