கோரக்கர் அதிபராக இளங்கோ நியமனம்.

சம்மாந்துறை வலயத்திலுள்ள கோரக்கர் தமிழ் மகாவித்தியாலய அதிபராக இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த சோமசுந்தரம் இளங்கோ நியமிக்கப்பட்டுள்ளார்.
 
கிழக்கு மாகாண கல்வியமைச்சு நடாத்திய நேர்முகத்தேர்வில் திரு இளங்கோ தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
 
அவருக்கான நியமனக்கடிதத்தை சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம்  நேற்று உத்தியோகபூர்வமாக வழங்கிவைத்தார்.
 
மேற்படி பாடசாலையின் அதிபராகவிருந்த விஜயகுமாரன் காலமாகியதையடுத்து அங்கு பிரதி அதிபராகவிருந்த சோ.இளங்கோ இதுவரைகாலமும் பதில்அதிபராக செயற்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts