மட்டக்களப்பு மாநகர ஆணையாளருக்கு எதிரா மேல் நீதின்றில் மாநகர முதல்வர் வழக்கு தாக்கல். சுமந்திரன் ஆஜர்

மட்டக்களப்பு மாநகர ஆணையாளருக்கு எதிராக தடை எழுத்தானை கோரி மாநகர சபை முதல்வரினால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் என் ஊடாக  வெள்ளிக்கிழமை (26; வழக்கு தாக்குதல் செய்யப்படுள்ளது என சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபை தீர்மானத்தின் மூலம் முதல்வரினால் 10 அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தது. இந் நிலையில் பெப்பிரவரி 11ம் திகதி இன்னொரு சபை தீர்மானத்தின் மூலம் கையளிக்கப்பட்ட அதிகாரங்கள் மீளப்பெறப்பட்டுள்ளது.
 
 
குறித்த அதிகாரங்கள் மீள பெற்றுள்ள நிலையில் அதற்கு நான் நடக்கமாட்டேன் எனவும் அந்த அதிகாரங்களை தானே பயன்படுத்துவேன் என்றும் விடாப்பிடியாக மாநகரஆணையாளர் செயற்பட்டுக் கொண்டிருப்பதன் காரணமாக அவரை அப்படியான செயற்பாட்டில் இருந்து தவிர்ப்பதற்கும். அந்த அதிகாரங்களை அவர் பிரயோகிப்பதை சட்டப்படியதக நிறுத்துவதற்கும்  அவற்றை சட்ட ரீதியாக தடுக்கும் நோக்கில் இவ் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும்.
 
 
இதில் மேல் மனுதாரால் கேட்டிருக்கின்ற நிவாரணங்கள் ஏன் வழங்கப்படக்கூடாது என நீதிமன்றம் கேட்டு மட்டக்களப்பு ஆணையாளரிற்கும் இரண்டாவது பிரதிவாதியான கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரிற்கும் ஏப்பிரல் முதலாம் திகதி வழக்கு விசாரணைக்கு நீதிமன்றில் எடுத்துக் கொள்ளும்போது ஏன் இந்த நிவாரணங்கள் வழங்கப்படக்கூடாது என்பதற்கு அவர்கள் காரணம் காட்டவேண்டும் என நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது என எம்.சுமந்திரன் தெரிவித்தார்.

Related posts