கௌரவ பிரதமரின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனைய திட்டத்திற்கான பணிகள் ஆரம்பம்

சர்வதேச விமான சேவை தொடர்புகளின் போது நட்பான சூழலை ஏற்படுத்தி ஒரு நிலையான பொருளாதாரத்தை நோக்கிய பயணத்திற்கு வழிவகுக்கிறது.
 
தற்போதுள்ள பயணிகள் முனையம் 60 இலட்சம் பயணிகளைக் கையாளவே போதுமானதாக உள்ளமையால், பயணிகள் நடவடிக்கைகளுக்கு போதுமான முனைய வசதிகள் இல்லாதது ஒரு பிரச்சினையாக உள்ளது.
 
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட பணிகளின் சேவை வழங்குனர்களாக விமான நிலைய மற்றும் விமான போக்குவரத்து அதிகாரசபை காணப்படுகிறது. அதன் ஆலோசகர்களாக ஜே.வி., ஜப்பான் விமான நிலைய ஆலோசனை நிறுவனம் மற்றும் நிபோன் கோய் நிறுவனம் ஆகியன காணப்படுகின்றன.
 
மூன்று வருட காலப்பகுதிக்குள் இதன் பணிகளை நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுவதுடன், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (ஜெய்கா) இதன் நிதி வழங்குனராக செயற்படுகிறது. ஜப்பானின் டாய்சேய் நிறுவனம் திட்ட ஒப்பந்தக்காரராக செயல்படுகிறது. பணிகள் நிறைவடைந்தவுடன் 90 இலட்சம் பயணிகள் திறனை கொண்டதாக செயற்படவுள்ள இதன் மொத்த கடன் தொகையில் 100 வீதமும் விமான நிலைய மற்றும் விமான போக்குவரத்து நிறுவனத்தினால் செலுத்தப்படும்.
 
நவீன தொழில்நுட்ப பயன்பாட்டின் மூலம் பணிகள் நிறைவு செய்யப்படவுள்ள இத்திட்டத்தில், வருகைத் தரும் மற்றும் வெளியேறும் பயணிகளை வேறுபடுத்தல், மையப்படுத்தப்பட்ட பாதுகாப்பு கட்டுப்பாட்டு அமைப்பு, பல மாடிகளை கொண்ட வாகன நிறுத்துமிடங்களிலிருந்து விமான நிலையத்திற்கு நேரடியாக வருகை தரல் மற்றும் வெளிச் செல்லும் வசதி, பெரிய விமானங்களின் பயணங்களுக்கென ஒதுக்கப்பட்ட பயணிகள் நுழைவாயில் (யுசை டிரள   யு380), சிறப்பு விருந்தினர் ஓய்வறை, விமான பணியாளர் ஓய்வறை – வருகைகள் மற்றும் புறப்பாடு, நுழைவாயில்களை அண்மித்த ஓய்வறைகள், சுங்க வரிகள் அற்ற கடைகள், உணவகங்கள், பார்வையாளர் கூடம் முதலியவற்றை உள்ளடக்கிய முழுமையான தளவமைப்பைக் கொண்டுள்ளன.
 
குறித்த சந்தர்ப்பத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க, விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ டீ.வி.சானக, கௌரவ இராஜாங்க அமைச்சர்களான இந்திக அநுருத்த, நிமல் லன்சா, தாரக பாலசூரிய, நாலக கொடஹேவா, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சஹன் பிரதீப், கோகிலா குணவர்தன, நளின் பெர்னாண்டோ, இலங்கை விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி, சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.ஹெட்டிஆராச்சி, விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு.மாதவ தேவசுரேந்திர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
பிரதமர் ஊடக பிரிவு  

Related posts