கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பங்களாதேஷ் நாட்டு வெளிவிவகார அமைச்சருக்கு இடையிலான சந்திப்பு

பங்களாதேஷ் நாட்டுக்கு  இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும்,பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஏ.கே.அப்துல் மோனன் அவருக்கும் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை  (2021.03.19)  டாக்கா தலைநகரில் இடம் பெற்றது.
 
இலங்கைகைக்கும் பங்களாதேஷிக்கும் இடையிலான  இராஜதந்திர உறவு , வர்த்தக மற்றும் முதலீடு  ஆகிய துறைகளின் இரு தரப்பு ஒத்துழைப்பினை மேம்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
 
2020 ஆம் ஆண்டு இலங்கைக்கும் பங்களாதேஷ்  நாட்க்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 50 ஆவது வருடம் முழுமைப் பெறுகிறது.
 
கடந்த காலங்களில் பங்களாதேஷ் நாட்டின் பொருளதார வளர்ச்சி தொடர்பில் பிரதமர மஹிந்த ராஜபக்ஷ அவதானம் செலுத்தினார்.இலங்கையின் முதலீட்டாளர்கள் பலர் பங்களாதேஷில் வர்த்தக நடவடிக்கைகளில் முதலீடு செய்துள்ளார்கள் என  சுட்டிக்காட்டினார்.
 
பங்களாதேஷிக்கும், இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேம்படுத்தும் நோக்கில் ஒன்றினைந்த ஆலோசனை ஆணைக்குழுவின் செயற்பாடுகளை பலப்படுத்துவது குறித்து இரு தரப்பு பேச்சுவார்த்தையின் ஊடாக கவனம் செலுத்தப்பட்டது.ஒன்றினைந்த ஆலோசனை ஆணைக்குழுவில் இரு நாட்டு  வெளிவிவகார அமைச்சர்களும் அங்கத்துவம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 
இச்சந்திப்பில் பங்களாதேஷ் நாட்டின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர்,மேலதிக செயலாளர் ,அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டார்கள்.

Related posts