சமூகசேவகர் க.துரைநாயகம் அவர்களது சொந்த நிதியில் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு

சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்க பொருளாளர் சமூகசேவகர் தொழிலதிபருமான க.துரைநாயகம் அவர்களது சொந்த நிதியில் சுவிஸ் உதயம் அமைப்பின் ஊடாக சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட அன்னமலை ஸ்ரீசக்தி வித்தியாலயத்தில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த இரு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டன.

சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்க பொருளாளர் சமூகசேவகர் தொழிலதிபருமான க.துரைநாயகத்தின் சொந்த நிதியூடாக இந்த துவிச்சக்கர வண்டிகள் குறித்த மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.

 நிகழ்வு இன்று  12 பாடசாலையின் அதிபர் பொ.பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்க பொருளாளர் க.துரைநாயகம்,சம்மாந்துறை வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் திருமதி நிதர்சினி மகேந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிறப்பு அதிதிகளாக முன்னாள் பிரதி வலய கல்விப்பணிப்பாளரும் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண தலைவருமான மு.விமலநாதன்,முன்னாள் பிரதிக்கல்வி பணிப்பாளரும் அமைப்பின் உபதலைவருமான கன.வரதராஜன்,சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண சங்கத்தின் செயலாளர் திருமதி ரொமிலா செங்கமலன்,பொருளாளர் அக்கரைப்பாக்கியன் சம்மாந்துறை கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் குணரெட்ண  சமூர்த்திமுகாமையாளர் க.இதயராசா உட்பட அமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வெட்டுப்புள்ளிகளைப்பெற்ற இரு மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டதுடன் மாணவர்களுக்கான உதவியினை வழங்கிய சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்க பொருளாளர் க.துரைநாயகம் பாடசாலை சமூகத்தினால் கௌரவிக்கப்பட்டார்.

இவ் உதவியினைச் செய்த தொழிலதிபர் க.துரைநாயகம் அவர்களுக்கு பாடசாலையின் அதிபர் பொ.பாரதிதாசன் மற்றும் பாடசாலைச் சமூகம் நன்றிதெரிவித்துள்ளனர்

Related posts