சம்மாந்துறையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

சம்மாந்துறை பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை சம்மாந்துறை பிரதேச சபை, பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பொலிஸ் நிலையம், நம்பிக்கையாளர் சபை, சனசமூக நிலையங்கள், வர்த்தக சங்கள், சமூக தொண்டர் அமைப்புகள் ஆகியன ஒன்றிணைந்து  வேலைத்திட்டதினை நேற்று முன்னெடுத்தனர்.
 
இதன்போது டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய குப்பைகள், நீர்தேங்கியுள்ள இடங்கள் துப்புரவு செய்யப்பட்டதுடன் டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய இடங்கள் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டதுடன் பொதுமக்கள் பயன்படுத்தும்  பிரதேசங்களில்  புகையும் விசுறப்பட்டது.
 
சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் நடைபெற்ற இவ்வேலைத்திட்டத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.எம்.கபீர், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெப்பை, பிரதேச சபை உத்தியோகத்தர்கள், சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல்களின் பிரதிநிகள், பொது மக்கள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்.  

Related posts