சிறப்பாக நடைபெற்ற சம்மாந்துறை தீ மிதிப்பு வைபவம்!

வரலாற்றுப்பிரசித்திபெற்ற சம்மாந்துறை பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த தீமிப்புவைபவம் ஆலய தர்மகர்த்தா எஸ்.சுப்பிரமணியம் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
 
முன்னாள் கப்புகனார் கே.பாஸ்கரன் வழிகாட்டலில் பிரதம பூசகர் கு.லோகேஸ் முன்னிலையில் (17) இத்தீமிதிப்பு வைபவம்  சிறப்பாக  நடைபெற்றது.
 
நேற்று அதிகாலையில் தீமிதிப்பிற்கான சடங்குகள் ஆரம்பமாகி காலை 6மணியளவில் தீமிதிப்பு நடைபெற்றது.சுமார் 800 பக்தர்கள் தீமிதிப்பீலீடுபட்டனர்.
 
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பக்திப்பரவசத்துடன் தீமிதிப்பு வைபவம் இடம்பெற்றது.

Related posts