சிறுவர் சேமிப்புக் கணக்குகளுக்கான வரியை நீக்க நடவடிக்கை

18 வயதுக்குற்பட்ட சிறுவர்களுக்கான சேமிப்பு வங்கி கணக்குகளிலிருந்து, அறவிடப்படும் 5 சதவீத வரியை முழுமையாக நீக்க அரசாங்கம் தீர்மானத்துள்ளது.

சிறுவர் சேமிப்புக் கணக்குகளின் வட்டி வருமானம் 5 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறு தேக்கநிலை வரி கடந்த ஆட்சிக்காலத்திலிருந்து அறவிடப்பட்டது.

இந்நிலையில், அமைச்சர் மங்கள சமரவீர யோசனைக்கு அமைய இந்த வரியை முழுமையாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts