சுவிஸ் உதயம் அமைப்பினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு


(சா.நடனசபேசன்)
கொரோணா வைரஸ் தொற்று காரணமாக நாடு பூராகவும் முடக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் என்பன பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கின்ற மட்டக்களப்பு மன்முனைப் பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட குமாரபுரம் பிரதேச மக்களுக்கு சுவி;ஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் சுவிஸ் நாட்டில் வாழும் பி.எம்.ரி. நகையகத்தின் உரிமையாளர் மோகன் அவர்களது அனுசரணையில் 11.4.2020 சனிக்கிழமை உலர் உணவுப் பொதிகள் 50 வழங்கிவைக்கப்பட்டன.

அன்றாடம் தொழில் புரிந்து வாழ்வாதாரத்தை ஈட்டும் குடும்பங்களின் நிலைமையினைக் கருத்திற் கொண்டு சுவி;ஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் 1500 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் 50 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இவ் உதவியினை சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் சமூகசேவகர் தொழிலதிபர் க.துரைநாயகம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் பிரதித் செயலாளர் திருமதி செல்வி மனோகர் மற்றும் ரொபினா உட்பட சுவிஸ் உதயம் அமைப்பினர் கலந்துகொண்டனர்.

Related posts