டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த சம்மாந்துறையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த சம்மாந்துறையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு .
 
  கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஜீ . சுகுணன் அவர்களின் பணிப்புரைக்கு அமைய  சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். எஸ்.ஐ.எம் கபீரின் வழி காட்டலின் கீழ் சுகாதார மேற்பார்வைப் பரிசோதகர் ஐ.எல். றாஸிக் தலைமையில்  பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் கிராம சேவையாளர்கள்,  டெங்கு களத்தடுப்பு உத்தியோகத்தர்கள்,சம்மாந்துறை LIons Club இணைந்து (21) சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வீட்டுக்கு வீடு பரிசோதனை  நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
 
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் 940 வீடுகளில் மேற்கொள்ளப்பட்டது . நுளம்பு பரவலில் இனம் காணப்பட்ட 10 பேருக்கு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. . டெங்கு நுளம்பு பரவக்கூடிய 71 இடங்கள் அடையாளம் காணப்பட்டது. 
 
திடீர் சுற்றி வளைப்பு நடவடிக்கையில் . சுகாதார மேற்பார்வைப் பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம சேவையாளர்கள்,  டெங்கு களத்தடுப்பு உத்தியோகத்தர்கள், சம்மாந்துறை LIons Club உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts