தமிழர் பாரம்பரிய முறையுடன் கூடிய தாமரைக்கேணி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய வருடாந்த சக்தி சடங்கு விழா

மட்டக்களப்பு தாமரைக்கேணி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தமிழர் தம் பாரம்பரிய முறையுடன் கூடிய வருடாந்த சக்தி சடங்கு விழாவின் முதலாம் சடங்கு நேற்று (24) நடைபெற்றது.
நேற்று (24) பிற்பகல் இடம்பெற்ற சடங்கு விழாவில் தெய்வாதிகள் உள்விதி வலம் வந்து அடியார்களுக்கு அருள் வாக்குச் சொல்லும் நிகழ்வு இடம்பெற்றது.
 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை (24) தவநிலைச் சடங்கும், பிற்பகல் சடங்கும், நாளை திங்கட்கிழமை (25) அதிகாலை தேர்ச் சடங்கும், பிற்பகல் சடங்கும், செவ்வாய்க்கிழமை (26) அதிகாலை கப்பல் சடங்கும் பிற்பகலில் நெல்லுக் குத்துச் சடங்கும்,
புதன்கிழமை (27) அதிகாலை பச்சை கட்டிச் சடங்கும் (பலிச்சடங்கு) முற்பகல் 11.00 மணிக்கு விநாயகப் பானை எழுந்தருளப் பண்ணலும், நண்பகல் 12.00 மணிக்கு நாகதம்பிரான் பொங்கலும், சர்க்கரையமுதும், பூசை ஒப்புக் கொடுத்தலும், பிற்பகல் 5.00 மணிக்கு அம்மன் திருக் குளிர்த்தி அதைத் தொடர்ந்து கடற்கரையில் கும்பம் சொரிதல் இடம்பெறும்.
வியாழக்கிழமை (28) நண்பகல் 12.00 மணிக்கு அன்னதானமும், வெள்ளிக்கிழமை (29) இரவு 7.00 மணிக்கு வைரவர் பூசை (தெளிவு சடங்கு) இடம்பெறும்.
சடங்கு விழா யாவும் ஆலய பரிபாலன சபையினரின் பங்கு பற்றலுடன் ஆலய பிரதம குரு சக்தி கே. குமாரதாசன் தலைமையில் நடைபெறும். வருடாந்த சடங்கு உற்சவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (22) சக்தி கு. சுவேந்திரன் தலைமையில் ஸ்ரீ மகா சக்தி யாகத்துடன் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.
????????????????????????????????????

Related posts