தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக அனைத்து தரப்பிலும் பாடுபடுகின்றனர்

தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக   அனைத்து தரப்பிலும் புத்திஜீவிகள் பொதுமக்கள் அரசியல்வாதிகள் அனைவரும் பாடுபடுகின்றனர் என அம்பாரை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளருமான   தவராசா கலையரசன் தெரிவித்தார்.

 தமிழ் தேசிய கூட்டமைப்பில் இலக்கம் 5 இல் போட்டியிடும் இவர் அம்பாறை மாவட்ட தேர்தல் நிலைமை தொடர்பில் செவ்வாய்க்கிழமை(16)  விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறனார்.
 
மேலும் தனது கருத்தில்
 
2020ம் ஆண்டு அம்பாரை மாவட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பில் போட்டியிடுகின்றேன். குறிப்பாக தமிழர்கள் மூன்றாவது  அம்பாறை மாவட்டத்தில் பிரஜையாக வாழ்ந்துவரும் சூழ்நிலையில் இந்த தேர்தல் மிக முக்கியமான ஒரு தேர்தலாகும்.இன்றைய காலகட்டதில் தமிழர்கள் விழிப்பாக செயற்பட வேண்டும்.பல கட்சிகள் சுயேட்சைக்குழுக்கள் எமது அம்பாறை மாவட்ட பிரதிநிதித்துவம் தமிழர்களின் வாக்குகளை சின்னாபின்னமாக்க இல்லாதொழிக்க பல நிகழ்ச்சி நிரல்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றது. குறிப்பாக தமிழ் மக்களிடையே பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன அவை நியாய பூர்வமாக  இருந்தாலும் இவர்களின் சூழ்ச்சிகளை கண்டு நாம் தள்ளி நிற்க முடியாது அவ்வாறு போனால் பலமற்ற சமூகமாக மாறிவிடுவோம். அந்த அடிப்பலையில் எமக்கு சாதகமாக பயன்படுத்தி எமது இருப்பைகாப்பற்ற வேண்டும். இவ்வாறான சந்தர்பத்தை நழுவ விட கூடாது.
 
மேலும்  தமிழர்கள்  அரசியல் மாத்திரம்  பயணித்தவர்கள் அல்லர். இந்த பயணம் என்பது பல போராட்டங்களுக்கு மத்தியிலும் பல தியாகங்களுக்கு மத்தியிலும் உருவாக்கபப்டட்து இந்த கட்சியும் அதன் அரசியல் பயணமும் ஆகும். தமிழர்களின் இலட்சியம் இருப்பை பாதுகாக்க கட்சியின் பாலும் எமது மக்களின் பால் பற்றுறுதி கொண்டவர்களும் எமது மக்களுடன் சேர்ந்து  செயற்பட வேண்டும் . எமது பிரதிநிதித்துவம் பாதுகாக்கபபட வேண்டும் என்பதற்காக தலைமை என்னை களமிறக்கியுள்ளது.
 
 நான் 2006 ஆம் ஆண்டு முதல் அரசியலில் பயணித்து வருகின்றேன் அப்போதைய காலம் என்பது பல உயிர் அச்சுறுத்தல்கள் நிறைந்த காலப்பகுதி பல கரடு முரடான அரசியல் பயணத்தை சந்தித்தவர்கள் அந்த பயணத்தில் ஒரு இலட்சிய சிந்தனையை மனதில் நிறுத்தித் அரசியலுக்குள் நுழைந்தோம் அந்த அடிப்படையில்  மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றேன்.  அவ்வாறான காலகட்டங்களில் பல பணத்தைக் கொடுத்து விலை பேச முயற்சித்தனர் அவ்வாறான முயற்சிகளும் உதாசீனப்படுத்தப்பட்டது. இந்த காலகட்டத்திலும் அவ்வாறான அரசியல் கால் புரட்சிக்கான வார்த்தைகள் பேசப்பட்டு வருகின்றன இது எனது அரசியல் வளர்ச்சியை பிடிக்காத ஒரு சிலரால் இது கட்டவிழ்த்து விடப்படுகிற கட்டுக்கதைகளாகும்.அவர்களின் கருத்தை நான் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. ஏனெனில் அவர்களுக்கு ஆதாரபூர்வ மில்லை அடிப்படை கருத்தும் இல்லை.
 
எமது மாகாணம் பல காரணிகளால் அழிவுற்று உள்ளது நான் மாகாணசபையில் உள்ள காலத்தில் எதிர் தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்ளும் இடத்திற்கு கூட நான் சென்று குறிப்பாக எமது மக்கள் காணிகளை இராணுவத்தினர் அவதரித்த போதும் நமது மக்களை சிறைப்பிடித்த போதும் அவ்விடத்தில் நின்று தடுத்து நிறுத்தி மக்களுக்காக செயற்பட்டு இருக்கின்றேன் . எமது மக்கள் நீண்ட ஒரு  யு த் த அழிவில் இருந்தவர்கள் அவர்களுக்கு பாரிய தேவைப்பாடுகள் இருக்கின்றது எனக்கு பாராளுமன்ற செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தால் முன்பை விட பல மடங்கு வேகமாக செயற்பட்டு அவர்களது பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதில் முழு மூச்சாக செயற்படுவேன்.
 
இம்முறை தமிழ்த தேசியக் கூட்டமைப்பிற்கு ஏனைய கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் பாரிய சவாலாக அமையாது காரணம் எமது தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக அனைத்து தரப்பிலும் புத்திஜீவிகள் பொதுமக்கள் அரசியல்வாதிகள் அனைவரும் பாடுபடுகின்றனர்.எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளது இவற்றை குறிவைத்து சில அரசியல் கட்சிகள் எமது பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 
இவர்களே கடந்த நல்லாட்சிக்கு முன்னர் ஆட்சியை செய்தவர்கள் பல வாக்குறுதிகளை எமக்கு வழங்கி அந்த வாக்குறுதிகள் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை ஏன் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கூட இவ்வாறான விடயங்கள் பல தீர்க்கப்படும் என பேசப்பட்டது இவ்வாறான விடயங்கள் இன்றுவரை தீர்க்கப்படாமல் உள்ளதை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். பல சவால்களுக்கு மத்தியில் பயணித்தவர் தமிழ்மக்கள் இவ்வாறானவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி  சோரம் போகமாட்டார்கள்.கடந்த 2015ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தினை பெற்றிருந்தேன் என்றார்.
 
இங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தவராசா கலையரசனை ஆதரித்து நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினர்கள் கருத்து குறிப்பிடுகையில்.
 
அ.சுதர்சன்
 
எமது அம்பாறை மாவட்டத்து அனைத்து தமிழ் மக்களும் கடந்த காலங்களில் பல துயர துன்ப சம்பவங்களை சந்தித்து வந்தவர்கள் கட்சி பேதங்களுக்கு அப்பால் எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வாக்களித்து எமது இருப்பை பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
 
என். தர்சினி
 
2020 பாராளுமன்றத் தேர்தலில் எமது அம்பாறை மாவட்டத்தில் மக்கள் இம்முறை இரண்டு பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்காக வாக்களிக்க வேண்டும். சில காட்சிகள் நம்மை சிதைக்க முன்வந்துள்ளன இவர்களை விரட்டியடிக்க வேண்டும் .
 
எம்.நிறோஜன்.
 
நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் எமது பிரதேசத்தின் சார்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்களே எமது மக்களின் சார்பில் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் நலிவுற்ற மக்களின் நலனை பாதுகாக்க ஒன்றிணைந்து செயலபடுவோம்
.
அ.குணரெட்னம்
 
தமிழர் வரலாறு பற்றி சிந்தித்து அம்பாற மக்கள் எமது பிரதிநிதிகளை பாதுகாக்க
 ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என குறிப்பிட்டனர்.
 
மேலும்  மேற்குறித்த வேட்பாளர் அம்பாறை மாவட்டத்தில் கடந்த 2015 அம்பாறை மாவட்டத்தில்  விருப்பு வாக்கு அடிப்படையில் இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts