தமிழ் பெண்ணிடம் தகாத முறையில் நடந்த சிங்கள ஊழியர் கைது..! ஆதரவு வழங்கிய நாமல் ராஜபக்ஷ..!

இலங்கை ரயில் திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் நடவடிக்கை தொடர்பாக மனிதவுரிமை ஆணைக்குழுவிலும் யாழ். ரயில் நிலைய அதிபரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டமையை அடுத்து, குறித்த ஊழியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தொடர்பாக ஏற்கனவே இரு முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்.காங்கேசன்துறை நோக்கி சென்ற ரயிலில் தவறான முறையில் நடந்துகொண்ட ஊழியருக்கு எதிராக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு வந்த பெண்ணொருவர், நேற்று (திங்கட்கிழமை) காலை யாழ்ப்பாணம் சென்ற சந்தர்ப்பத்தில் அவரை நோக்கி ரயில்வே ஊழியர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், நாமல் ராஜபக்ஷ “துன்புறுத்தல்கள் மற்றும் இனவெறிக்கு இலங்கையில் இடமில்லை. இவ்வாறான செயல்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்கு சம்பந்தப்பட்டவருக்கு எதிராக உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்” என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முறைப்பாடு பதிவு செய்ய சென்ற பாதிக்கப்பட்ட பெண் 3 மணி நேரமாக பொலிஸ் நிலையத்தில் காத்திருந்ததாகவும், அவரிடம் முறைப்பாட்டை பெற்றுக்கொள்ள தமிழ் பேசும் பொலிஸார் எவரும் முன்வரவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Related posts