திருக்கோவில் ஆடிஅமாவாசை உற்சவம் இம்முறை நடைபெறாது!சுகாதாரத்துறையினரின் இறுக்கமே காரணமென்கிறது

திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் .இம்முறை நடைபெறாது என ஆலய நிருவாகம் அறிவித்துள்ளது.
 
திருக்கோவில் பிரதேச சுகாதாரத்துறையினர் விடுத்த இறுக்கமான நடைமுறைகளுக்கேற்ப உற்சவம் நடாத்த முடியாத காரணத்தினால் மேற்குறிப்பிட்ட முடிவுக்கு வந்திருப்பதாக சபை தெரிவித்துள்ளது.
 
ஆலயத் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் செயலாளர் அ.செல்வராஜா ஆகியோர் இணைந்து
நிருவாகசபையின் தீர்மானம் பற்றி தகவல் தருகையில்:
திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கடந்த 12 ஆம் திகதி திங்கள் கிழமை திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பி.ப.2:30 மணிக்கு இடம்பெற்றது.
 
இக் கூட்டத்தில் திருக்கோவில் பிரதேச கொவிட்19 செயலணி குழுவினரும் கலாசார உத்தியோத்தர்கள் மற்றும் ஆலய நிருவாகத்தினரும் கலந்து ஆலோசித்து எடுக்கப்பட்ட தீர்மானங்களின்படி உற்சவத்தை நடாத்தமுடியாது.
 
குறிப்பாக சுகாதாரத்துறையினரால் அங்கு விதிக்கப்பட்ட பின்வரும் இறுக்கமான நடைமுறைகளை பின்பற்றுவது எமது ஆலயத்தைப்பொறுத்தவரை சிரமம். சிலவேளை அது மீறுகின்ற பட்சத்தில் தேவையற்ற விளைவுகளை நாம் சந்திக்கக்கூடும் என்று அச்சப்படுகிறோம்.
 
ஆலயத்தினுள் 30பேருக்கு மாத்திரம் அனுமதி. அவை யாவும் ஆலய நிருவாகத்தினரும் குருமார்களும்  உள்ளடங்களாகவே ஆகும். இவர்கள் அனைவரும் பிசிஆர்  பரிசோதனை செய்வது கட்டாயம்.
இவ் ஆண்டில் காவடி தீச்சட்டி கடைகள் களியாட்டம் அங்கப்பிரதட்சனம் யாசகம் என்பவற்றுக்கு அனுமதி இல்லை. பூசை உபயகாரர்களுக்கு அனுமதி இல்லை.
 
ஆலய ஒலிபெருக்கி மேளதாளம் தேவையில்லை..21 நாட்கள் பூசை மாத்திரம் இடம்பெறும்.203 ஆம் வெளி வீதி திருவிழாக்கள் எதுவும் இடம்பெறக்கூடாது.
 வெளியிடப்பத்தர்களுக்கும் யாசகர்கள் உற்சவத்துடன் தொடர்புடையோர் யாவருக்கும்  ஆலயத்தினுள் செல்வதற்கு அனுமதி இல்லை
திருக்கோவில் பிரதேசத்தில் கொரோணா  தடுப்பூசி போடுபடவில்லை.  இப்பிரதேசத்தில் இதனால் தொற்று பரவலுக்கான வாய்ப்பு இருப்பதே காரணம்..என்று அங்கு சொல்லப்பட்டது.
 
இவை அக்கூட்டத்தில் அவர்களால் சொல்லப்பட்டவை. எம்மைப்பொறுத்தவரை எமது நிருவாகசபை கூடி எடுத்த முடிவின் பிரகாரம் திருவிழா நடாத்துவதில்லை என்று தீர்மானித்திருக்கிறோம். அதற்கான காரணங்கள் வருமாறு:
 
எமது ஆலயம் அரச வர்த்தமானியில் பதிவுசெய்யப்பட்ட தேசத்துக்கோவில். திருக்கோவில் தம்பிலுவிலுக்கு அப்பால் 15கிராமங்களுடன் சம்பந்தப்பட்டது.15கிராமங்களுக்கும் வட்டாரப்பிரதிநிதிகள் உள்ளனர். பயணத்தடை நீக்கப்பட்டு அரசும் சுயாதீனமாக அனைத்தையும் தளர்த்தியிருக்கின்ற இன்றைய காலகட்டத்தில் எமது ஊர்களைச்சேர்ந்த வட்டாரப்பிரதிநிதிகளைத்தானும் வரக்கூடாது என்று சொல்லமுடியாது அது அவர்களது உரிமை.வங்கியில் பூசைக்குரிய பணத்தை இடுங்கள்.நாங்கள் பூஜை செய்கிறோம் என்று சொல்லமுடியாது. அதனை அவர்கள் ஏற்கவும் மாட்டார்கள்.
 
அடுத்தது இந்து ஆகமமுறைப்படி அமைந்த ஆலயம். மேளதாளம் ஒலிபெருக்கி இல்லாமல் திருவிழா செய்யமுடியாது. கொடியேற்றமும் நடாத்தமுடியாது.அது ஆகமமுறைக்குப்பிழை.தெய்வகுற்றமாகும்.
 
அரசாங்க சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் கடந்த 10ஆம் திகதி இறுதியாக வெளியிட்ட சுற்றுநிருபப்படி ஆலயம் மற்றும் தேவாலயங்களின் உற்சவங்களின்போது 50பேர் கலந்துகொள்ளமுடியுமென்று தெரிவிக்கின்றது.ஆனால் இங்கு 30பேர்தான் அனுமதிகக்முடியுமென்று கூறப்பட்டது. எம்மைப்பொறுத்தவரை 30பேருடன் உற்சவம் நடாத்தமுடியாதென்பதே எமது தீர்மானம்.
 
இந்தவருடத்திற்கான ஆடிஅமாவாசை உற்சவம் ஜூலை மாதம் 22ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 08ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts