மண்முனை மேற்கு பிரதேச செயலக விவசாயிகளுக்கான சேதனப்பசளையிடல் முக்கியத்துவமும்,தயாரிக்கும் முறை பற்றிய விளக்கமளிக்கும் செயலமர்வு

மண்முனை மேற்கு பிரதேச செயலக விவசாயிகளுக்கான சேதனப்பசளையிடல் முக்கியத்துவமும்,தயாரிக்கும் முறை பற்றிய விளக்கமளிக்கும் செயலமர்வு மண்டபத்தடி கமநல சேவை நிலையத்தில் இடம்பெற்றது.
 
 

ஜனாதிபதியின் சுபீட்சத்தை நோக்கு திட்டத்திற்கமைவாக கிழக்கு மாகாண விவசாயிகளுக்கு சேதனப்பசளையின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு செயற்றிட்டங்கள் விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதியின் சுபீட்சத்தை நோக்கு திட்டத்திற்கமைவாக கிழக்கு மாகாணத்தில் உள்ள விவசாயிகளுக்கு சேதனப்பசளையின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு செயற்றிட்டங்கள் தொடர்ச்சியாக விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

இதேவேளை மட்டக்களப்பு படுவான்கரை விவசாயிகளின் நன்மை கருதி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் கமநல சேவை திணைக்களங்களின் ஊடாக விவசாயிகளுக்கு சேதனப்பசளை தயாரித்தல் சம்மந்தமான பயிற்சிகள் முன்னெடுக்ப்பட்டுவருகிறது.

மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிட்குட்பட்ட விவசாயிகளுக்கான சேதனப்பசளையிடல் முக்கியத்துவமும் தயாரிக்கும் முறை பற்றிய விளக்கமளிக்கும் செயலமர்வு மண்டபத்தடி கமநல சேவை நிலையத்தில் அதன் பெரும்பாக உத்தியோகத்தர் கோ.உதயகுமார் தலைமையில் இடம்பெற்றது.

இங்கு வைக்கோல்,மாடு ஆடுகளின் எரு ,கிளிசரியா, காய்ந்தவாழை,இலைகள், சருகுகள்,காய்ந்த புட்கள், கரைத்த சாணம்,ஆகிய மூலப் பொருட்களை கொண்டு பக்கவிளைவுகளற்ற சேதனப்பசளையை தயாரிக்கும் முறை பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.இதில் இப் பகுதி விவசாயிகள் மண்டத்தடி கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள் மாவட்ட விவசாய திணைக்கள பிரதிநிதிகள எனப் பலர் கலந்துகொண்டனர்

Related posts