திருக்கோவில் பிரதேசத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த வீடற்ற குடும்பங்களுக்கு நிரந்தர வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

(திருக்கோவில்  -எஸ்.கார்த்திகேசு)
திருக்கோவில் பிரதேசத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த வீடற்ற குடும்பங்களுக்கு நிரந்தர வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

கொரோனா அச்சுறுத்தலுக்கும் நடுவில் அரசின் அபிவிருத்தி பணிகள் தடையின்றி முன்னெடுப்பு

நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் வீ;டற்ற நிலையில் வாழ்ந்து வரும் சுமார் 98 குடும்பங்களுக்கு அரசினால் நிரந்தர வீடுகள் நிர்மாணித்து கொடுக்கும் பணிகள் கொரோனா அச்சுறுத்தலுக்கும் மத்தியிலும் மக்களுக்கான அரசின் அபிவிருத்திப் பணிகள் தடையின்றி திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் திருக்கோவில் பிரதேசத்தில் சாகாமம் மீள்குடியேற்ற கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் மூன்று வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு கிராம சேவை உத்தியோகத்தர் எஸ்.பார்த்தீபன் தலைமையில் சாகாமம் கிராமத்தில் இன்று இடம்பெற்று இருந்தன.

இவ் வீட்டுத் திட்டமானது கிராமிய வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் ஊடாக 2009 ஆம் ஆண்டுக்கு முன் இடம்பெயர்ந்து குடியமர்ந்த குடுப்பங்களுக்கு வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்படவுள்ளன.

அந்தவகையில் திருக்கோவில் பிரதேசத்தில் இரு அங்கத்தவர்கள் அல்லது அதற்கு குறைவான அங்கத்தவர்களைக் கொண்ட குடுபத்திற்கு 6 இலட்சம் பெறுமதியான வீடுகளும் அதற்கு மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட குடுபங்களுக்கு 10 இலட்சம் பெறுமதியான வீடுகள் என திருக்கோவில் பிரதேசத்தில் 98 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் வீடுகளின் நிர்மாணப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் கிராம சேவை உத்தியோகத்தர் எஸ்.பார்த்தீபன் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எஸ்.கார்த்திகேசு கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் வே.விநாயகமூர்த்தி மற்றும் பயனாளிகள் ஆகியோரும் கலந்து கொண்டு இருந்ததுடன் கொவிட் 19 சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக நிகழ்வுகள் இடம்பெற்று இருந்தன.

Related posts