துறைநீலாவணை இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் வருடாந்த ஒன்றுகூடலும் கௌரவிப்பு நிகழ்வும்

துறைநீலாவணை இளைஞர் அமைப்பின் திட்டமிட்ட ஒருங்கிணைப்பில் வருடாந்த ஒன்றுகூடலும் கௌரவிக்கும் நிகழ்வு துறைநீலாவணை கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத்தில் அமைப்பின் தலைவரும்,வங்கி முகாமையாளருமான அரசரெத்தினம்-வேளராசு தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆன்மீக அதிதியாக துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ கு.நல்லராசா குருக்களும்,மற்றும் அதிதிகளாக துறைநீலாவணை அன்னையின் புதல்வர்களான வைத்தியர் கேசுபதி-ஜீவரதன்,பொறியாளர்களான கேசுபதி-விஜயரதன்,ஆறுமுகம்-பவித்திரன்,பிரதிக்கல்வி பணிப்பாளர் புருசோத்மன்-திவிரதன்,அதிபர்களான கு.மனோகரன்,ஏ.மனோகரன், மேலதிக மாவட்ட பதிவாளர் புருசோத்மன்-நித்தியானந்தன்,ஊடகவியலாளர் க.விஜயரெத்தினம்,சிறுவர் நன்நடத்தை உத்தியோகஸ்தர் தி.தயாளன்,ஆசிரியர்களான பூ.இதயகுமார்,திருமதி. கிரிதா லிங்கநாதன்,எஸ்.எழில்வேந்தன்,அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களான எஸ்.குமுதராஜ்,சோ.சந்திரகுமார்,கிராமசேவையாளர்களான ஏ.விஜிதரன்,கே.சுரேஸ்,பே.புனிதன்,சமுர்த்தி அபிவிருத்தி  உத்தியோகஸ்தர் சா.பவித்திரன்,இளைஞர் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள்,பெற்றோர்கள் கலந்துகொண்டார்கள்.இதன்போது துறைநீலாவணை கிராமத்தில் இவ்வருடம் புலமைப்பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்குமேல்  சித்தியடைந்த 10 மாணவர்களுக்கு ஞாபகார்த்த கிண்ணமும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. இம்மாணவர்களை கற்பித்த ஆசிரியர்களும்    மேலும் கிராமத்தில் சாதனைபடைத்தவர்களும்   கௌரவித்து ஞாபகார்த்த கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப் பெற்றார்கள். இதேவேளை துறைநீலாவணை கிராமத்தில் வறுமையில் சிக்கிக்கொண்டு கல்வியில் அதிகநாட்டம் செலுத்தி முதன்மையான மாணவர்களாக திகழும் 40 மாணவர்களுக்கு ஆயிரம்ரூபா(1000)பெறுமதியான வங்கிப்புத்தகங்கள் மற்றும் வங்கிப்பரிசுகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.

Related posts