துறைநீலாவணை கண்ணகி அம்மன் ஆலயத்தில் புலமையாளர்கள்  கெளரவிப்பு

கிலக்கிலங்கை வரலாற்றுப் புகழ் மிக்க துறைநீலாவணை கண்ணகி அம்மன் ஆலய உற்சவத்தின் இறுதி நாள் திருச்சடங்கு நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக சாதனையாளர் பாராட்டு விழா ஆலய வண்ணக்கர் முத்துவேல் தருமரெத்தினம் தலைமையில் ஆலய முன்றலில் கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.

இதன் போது துறைநீலாவணைக் கிராமத்தில் கடந்த 2018முதல் 2021ஆம் ஆண்டு ஆகிய காலப்பகுதியில் தரம் 5 புலமைப் பரிசில் சித்தி பெற்ற மாணவர்கள் ,க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினை பெற்றுக் கொண்ட மாணவர்கள்,அதே காலப்பகுதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று மருத்துவபீடம், பொறியியல் பீடம் உட்பட கலைப்பிரிவில் பல்கலைக்கழக அனுமதியினைப் பெற்றுக்கொண்ட சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவர்கள் நினைவுச் சின்னங்கள் வழங்கி அதிதிகளினால் கெளரவிக்கப்பட்டதுடன் கிழக்கு மாகாணக்கல்விப்பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் தமிழ்த் துறைப் பணிப்பாளர் செல்வி வை.விஜயலெட்சுமிஆகியோர் பொன்னாடை அணிவித்து கெளவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி புள்ளநாயகம் நகுலேஸ்வரி மற்றும் தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் தமிழ்த் துறைப்பணிப்பாளர் செல்வி.வை.விஜயலெட்சுமி,  பிரதேச செயலாளர் ந.நவநீதராஜா, பட்டிருப்புக் கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் பு.திவிதரன்,பொறியியலாளர்.க.தங்கவேல்,களுதாவளை பிரதேச சபையின் உறுப்பினர்.க.சரவணமுத்து,பாடசாலைகளின் அதிபர்கள் மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்

Related posts