தேங்கிய கடிதங்களைப் பகிர்வதற்காக ஊழியர்களை மேலதிக நேர சேவையில் ஈடுபடுத்தத் தீர்மானம்

தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் தேங்கியுள்ள கடிதங்களை விநியோகிப்பதற்கு ஊழியர்களை மேலதிக நேர சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாக பாரியளவான கடிதங்கள் தேங்கியுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார்.

ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்கி கடிதங்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேங்கியுள்ள கடிதங்கள் அனைத்தையும் எதிர்வரும் ஓரிரு தினங்களில் விநியோகிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார்.

ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் எவருக்கும் இழப்புகள் ஏற்பட்டிருப்பின், அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts