தைப்பொங்கலை முன்னிட்டு தொழிலதிபர் க.துரைநாயகம் அவர்களால் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு


எஸ்.சபேசன்
சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பொருளாளர் சமூகசேவகர் தொழிலதிபர் க.துரைநாயகம் அவர்களின் மகன் விஜி, மகள் சுஜி ஆகியோரின் சொந்த நிதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மிகவும் வறிய நிலையில் எந்த அடிப்படை வசதியும் அற்ற நிலையில் வாழ்ந்து வரும் கரடியனாறு கரடிக்குளம் கிராம மக்களுக்கு தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு 60 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை 13 ஆம் திகதி வழங்கிவைக்கப்பட்டது.
சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் துரைநாயகம் அவர்களது மகன் விஜி மகள் சுஜி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு சுமார் 10 இலட்சம் ரூபா செலவில் கரடிக்குளம் பிரதேசத்தில் வறிய குடும்பம் ஒன்றிற்கு வீடு அமைத்துக் கொடுத்து அதனைக் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வுகளை ஊடகங்கள் வாயிலாக பார்வையிட்ட ; சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பொருளாளர் சமூகசேவகர் தொழிலதிபர் க.துரைநாயகம் அவர்களது மகன் விஜி,மகள் சுஜி ஆகியோர் அக்கிராம மக்களின் வறுமைநிலையினை அவதானித்து உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்கான நிதி உதவியினைச் செய்திருந்தனர். இதன் அடிப்படையில் 60 வறிய குடும்பங்களுக்கு 2000 ரூபா பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பொருளாளர் சமூகசேவகர் தொழிலதிபர் க.துரைநாயகம் மற்றும் சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாணக்கிளையின் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன்,மட்டக்களப்பு இணைப்பாளர் திருமதி றொமிலா செங்கமலன் ஆகியோர் உலர் உணவுப்பொதிகளை வழங்கிவைத்தனர்

Related posts