நாகேந்திரன் ஞாபகார்த்தக் கிண்ணம் யார்வசமானது

(சா.நடனசபேசன்)

துறைநீலாவணைக் கிராமத்தின் சமூக முன்னோடிகளில் ஒருவரும் மத்தியவிளையாட்டுக்கழகத்தின் ஸ்தாபகர்களில் ஒருவருமான  அமரர் நாகேந்திரன் அவர்களது ஞாபகார்த்தக் கிண்ண மின்னொளியிலான கிறிக்கட் மென்பந்துச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியும் துறைநீலாவணைக் கிராமத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப்  பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வும் புதன்கிழமை மத்தியவிளையாட்டுக்கழகத் தலைவர் எஸ்.அரங்கநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இப்போட்டிக்கு அம்பாரை, மட்டக்களப்பு  திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த 64  விளையாட்டுக்கழகங்கள் கலந்துகொண்டனர்.

 

இந்நிகழ்வில் இந்நிகழ்வில் துறைநீலாவணை மண்ணின் மைந்தனும் அவுஸ்ரேலியா துறைநீலாவணை அமைப்பின்  இணைப்பாளர் பொறியியலாளர் கந்தையா கனகரெட்ணம் அவர்களும் பட்டிருப்பு கல்விவலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம்   நாகேந்திரன் அவர்களது துணைவியார் திருமதி நேசமணி நாகேந்திரன், ஓய்வுபெற்ற மட்டக்களப்பு கல்வி வலயத்தின் விஞ்ஞானவள நிலைய முகாமையாளர் நா.புள்ளநாயகம், துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலயம் பிரதம குரு சிவசிறி கு.நல்லராசாக் குருக்கள் துறைநீலாவணை மகாவித்தியாலயத்தின் அதிபர் தி.ஈஸ்வரன், விபுலாநந்தாவித்தியாலய அதிபர் ச.டில்லிநாதன், சித்திவிநாயகர்  வித்தியாலய அதிபர் அ.மனோகரன் மற்றும் மத்தியவிளையாட்டுக்கழகத்தின்  முன்னாள் தலைவர் ஆசிரியர் ஆ.சர்வேஸ்வரன் ஆசிரியர் ச.தவேந்திரன் மூத்த உறுப்பினர் எஸ்.சரவணமுத்து கிராமசேவகர்களான பே.புனிதன், க.சுரேஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டியின் போது முதலாமிடத்தினை களுவாஞ்சிக்கு மெக்ஸ் அணியினரும் 2 ஆம் இடத்தினை உதய சூரியன் அணியும் மூன்றாமிடத்தினை மட்டக்களப்பு ஜோன்ரீமிக்ஸ் அணியினரும் நான்காமிடத்தினை விநாயகபுரம் விநாயகர் அணியும் பெற்றுக்கொண்டனர்.

இதற்கான அனுசரணையினை நாகேந்திரனது புதல்வர் பொறியியலாளர் நா.மேகநாதன் அவர்களது நிதி அனுசரணையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts