நாட்டுக்கும் பிரதமருக்கும் ஆசீ வேண்டி முத்துக்களினாலான கலசம் சோமாவதி புனித தலத்திற்கு இன்று வழங்கப்பட்டது

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டும், கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் நாட்டுக்கு நலம் வேண்டியும் சோமாவதி புனித தலத்திற்கு வழங்கப்படவுள்ள முத்துக்களினால் அலங்கரிக்கப்பட்ட கலசம் (கரடுவ) இன்று (2020.10.30) அலரி மாளிகையில் அரச மரத்தடியில் வைக்கப்பட்டது.
 
பிரதமரின் எண்ணக்கருவிற்கமைய அனைத்து பௌர்ணமி தினங்களிலும் இடம்பெறும் ‘அமாதம் சிசிலச’ தர்ம உபதேசத் தொடரின் 203ஆவது தர்ம உபதேசத்தின் போது கொண்டுவரப்பட்ட பேழையை வழிபட்ட பிரதமர், சோமாவதி ரஜமஹாவிகாராதிபதி, பஹமுனே ஸ்ரீ சுமங்கள தேரரை தொலைபேசியில் தொடர்புகொண்டு சோமாவதி சந்நிதிக்கு கலசத்தை (கரடுவ) ஒப்படைத்தார்.
 
மொரட்டுவ, சத் கரடுவ நிறுவனத்தின் நதினி ஹேவாரத்ன அவர்களின் எண்ணக்கருவிற்கமைய நிர்மாணிக்கப்பட்ட ஆறு அடி உயரமான பித்தளை கலசம் முத்துக்களினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மிந்திகா லேகம்கே அவர்கள் உள்ளிட்ட பக்தர்கள் பலர் பங்களிப்பு செய்துள்ளனர்.
 
அலரி மாளிகையின் அரச மரத்தடியில் வைத்து கலசத்தை சோமாவதி சந்நிதிக்கு ஒப்படைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
 
கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் நாட்டு மக்களுக்கு நலம் வேண்டியும், நவம்பர் 17ஆம் திகதி பிரதமரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு ஆசீ வேண்டியும், பிரதமரின் குடும்பத்தினருக்கு ஆசீ வேண்டியும் இந்த கலசம் அன்பளிப்பு செய்யப்பட்டவுள்ளது.
 
பிரதமர் ஊடக பிரிவு

Related posts