நினைவுச்சின்னங்களை இடிப்பதும் இனப்படுகொலையின் மறுவடிவமே-பா.அரியநேத்திரன் மு.பா.உ

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை உடைத்து அழித்தமை இனப்படுகொலையின் மறுவடிவமாகவே நோக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் ஊடக செயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுகட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிரிவித்தார்.

 
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை யாழ் பல்கலைக்கழக நிருவாகத்தால் இடித்தமை தொடர்பாக கருத்து மேலும் கூறுகையில்.
 
ஒரு இனத்தின் கடந்தகால வரலாறுகள் புத்தகங்களாகவும் எழுத்துவடிவங்களாகவும் நினைவு சின்னங்களாகவும் உலகமெலாம் பேணிவருவது ஒரு நடைமுறை மரபாகும்.
 
அந்த விதமாகத்தான் 2009. முள்ளிவாய்க்கால் இறுதிப்போராட்டத்தின்போது இலட்சக்கணக்காண தமிழ் மக்கள் படுகொலைசெய்யப்பட்டனர், அவர்களில் சிறுவர்கள், இளைஞர்கள்,யுவதிகள், பெரியவர், முதியவர், மாணவர்கள், கல்விமான்கள்,மத்தலைவர்கள், புத்திஜீவிகள், தொழிலாளர்கள், என பலர் அடங்குவர் இவ்வாறானவர்களின் கண்ணீர் நினைவை பதிவாக்கும் ஒரு வரலாற்று ஆவண நினைவுத்தூபியாக யாழ்பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பல வருடங்களாக வடிவமகப்பப்பட்டிருந்தது.
 
ஆனால் நேற்று இரவு தீடிரென பல்கலைக்கழக நிர்வாகம் அந்த நினைவுத்தூபியை கனரக வாகனங்களைகொண்டு் எவருக்கும் தெரியாமல் இடித்து தள்ளப்பட்டதை்பார்க்கும் போது தமிழினப்படுகொலையின் மறுவடிவமாகவே இதனை உணரவைத்துள்ளது.
 
ஒரு புத்தீஜீவித்தளத்தின் நிர்வாகம் இந்த நினைவுத்தூபியை இனப்படுகொலை செய்துள்ளது இனப்படுகொலை என்பது இனத்தை மட்டும் அழிப்பதல்ல அந்த இனத்தின் வரலாற்று பாரம்பரிய நிலம் மொழி கலாசாரம் வரலாற்று சின்னங்களை அழிப்பதும் இனப்படுகொலைகளின் வடிவங்களே அந்த வபையில் இந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இரவோடு இரவாக இடித்து இடத்தின்வழராறு கொலைசெய்யப்பட்டுள்ளது எனவே உதுவும் ஒருவகை இனப்படுகொலைதான் என்பதில் சந்தேகம் இல்லை.
 
இராணுவத்தினர் பல இடங்களில் தமது போர் வெற்றி சின்னங்களாக பல நினைவுத்தூபிகளை வடக்கு கிழக்கு பகுதிகளில் நிறுவியுள்ளனர் இதை தமிழ்மக்கள எவருமே அகற்றுமாறு யாருஇடமும் முறையிடவில்லை,அதை கணக்கில் எடுக்கவும் இல்லை.
 
முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் என்பது விடுதலைப்புலிகளின் நினைவுச்சின்னமில்லை அது இறுதிப்போரில் இனப்படுகொலையான எமது அனைத்து உறவுகளையும் நினைவுகூரும் ஒரு நினைவு சின்னமாகவே அது்யாழ்பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்தது.
 
கடந்த காலங்களில் போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் உரிமை எல்லாமக்களுக்கும் உண்டு இது அனைத்துலக நீதியும் ஆகும் இதை மறுதலிக்கும் விதமாக தமிழ்மக்களின் உணர்வுகளை அடக்கி ஒடுக்கும் அராஜ செயலாகவே இந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டுள்ளது.
 
தற்போதைய அரசுக்கு ஆதரவு வழங்கும் வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜாங்க அமைசரசர்கள் அமைச்சர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் மௌனம் காப்பார்களா அல்லது இந்த நினைவுத்தூபியை் மீள்நிர்மானிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடும்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
யாழ்பல்கலைக்கழக நிர்வாகம் ஏதோ ஒரு அழுத்தம் காரணமாக இந்த நினைவுத்தூபியை இடித்து தரைமட்டமாக்கி இருந்தாலும் மீண்டும் இந்த நினைவுத்தூபியை அதே இடத்தில் அமைக்க ஆவன செய்ய வேண்டும் என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பு எனவும் மேலும் கூறினார்.

Related posts