பால்மாவின் விலையை 25 ரூபாவினால் குறைக்க வாழ்க்கை செலவின குழு தீர்மானம்

இதற்கமைவாக 400 கிராம் எடைகொண்ட பால்மா பக்கெட்டின் விலையும் குறைக்கப்படவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் பணிப்பாளர்             இந்திகாரணதுங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மலிக் சமரவிக்க தலைமையில் நேற்று இடம்பெற்ற வாழ்க்கை செலவின குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. பெரிய வெங்காயத்தை கொள்வனவு செய்வதற்காக தம்புள்ளை சதொச நிலையத்தில் கொள்வனவு நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஒரு கிலோ பெரிய வெங்காயம் 80 ரூபாவுக்கு விவசாயிகளிமிருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளது. தற்சமயம் ஒரு கிலோ உருளைக்கிழங்கு 90 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படுகிறது. இதுவரை 60 ஆயிரம்கிலோ உருளைக்கிழங்கு விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கேஸ் சிலிண்டரின் விலையை அதிகரிப்பதற்கான தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என்று அவர் வலியுறுத்தினார்.

Related posts