புனித அந்தோனியார் ஆலயம் திறப்பு விழா

மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுனதீவு பிரதேசத்தின் உன்னிச்சை 6ம் கட்டையில் மிக புராதான பழமைவாய்ந்த புனித அந்தோனியார் தேவாலையமானது கடந்த காலங்களில் ஏற்ப்பட்ட உள்ளுர் யுத்தம் காரனமாக மக்கள் இடம்பெயர்வுகாரனமாக  கைவிடப்பட்டு யுத்ததினால் அளிக்கப்பட்ட நிலையில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக பற்றை காடுகள் அடர்ந்து கானப்பட்டது.
 
இவ்வாலையத்தின் நிலை குறித்து மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அதி வந்தணத்திற்குரிய பொன்னையா ஜோசப் ஆண்டகைக்கு மக்கள் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அதனை மிழவும்புனரமைப்பு செய்வதற்கு திருவுள்ளம் கொண்டு அப்பணியினை முன்னெடுத்தனர்.
 
முன்னால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்களின் அயராத முயற்சியுடனும் ஊர் மக்கள் மற்றும் பண உதவிகளை வழங்கிய பரோபகாரிகள் தனவந்தர்களின் பங்களிப்புடன் இவ்வாலையம் மிழவும் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டு இன்று (6) திறந்து வைக்கப்பட்டது.
 
ஆயித்தியமலை சதா சகாயமாதா திருத்தலத்தின் நிறைவு நாள் இன்று புனித அந்தோனியார் ஆலயம் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அதி வந்தணத்திற்குரிய பொன்னையா ஜோசப்ஆண்டகை தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா முன்னால் அரசாங்க அதிபர் மா.உதயகுமார் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சானக்கியன் மாநகர முதல்வர் ரி.சரவணபவன் மற்றும் கிழக்கு பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சந்திரகாந்தா வவுனதீவு உதவி பிரதேச செயலாளர் திருமதி சதா சுபா அகியோரினால் திறந்துவைக்கப்பட்டது

Related posts