அன்னையின் திருத்தலம் நோக்கிய 64 வது பாதயாத்திரை

எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு   

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னையின் திருத்தலம் நோக்கிய 64 வது பாதயாத்திரை இன்று சனிக்கிழமை) காலை ஆரம்பமானது

மட்டக்களப்பு கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம்  நடைபெறும் இந்த பாதை யாத்திரையானது  தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக  சுகாதார வைத்திய அதிகாரிகளின்  அறிவுறுத்தலுக்கு அமைய  இந்த பாதை யாத்திரை முன்னெடுக்கப்பட்டு  பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்

ஒவ்வொரு வருடமும் ஆலய திருவிழாவை முன்னிட்டு  நடைபெறும் இந்த புனித பாதயாத்திரை  இன்று காலை மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் இடம்பெற்ற ஜெபவழிபாடுகளை   தொடர்ந்து  ஆரம்பமானது.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகையின் விசேட  செபவழிபாடுகளுடன்  ஆரம்பமான பாதயாத்திரை அன்னையின் திருவுருவ பவனியுடன்   வீச்சுக்கல்முனை அன்னம்மாள்  ஆலயம், வலையிறவுப் பாலம் ஊடாக அன்னையின் திருத்தலத்தை   சென்றடைந்தது 

கடந்த 28  ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன்  ஆரம்பமான ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை ஆலய திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை  காலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில்  நடைபெறவுள்ள விசேட  கூட்டுத் திருப்பலியுடன் நிறைவு பெறவுள்ள நிலையிலேயே இப் பாதயாத்திரை இன்று நடைபெற்றது

இந்த புனித யாத்திரையில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை  ,மட்டக்களப்பு  மறை மாவட்டத்தின் அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் மறை மாவட்டத்தின் அனைத்து பங்குகளில் இருந்து  வருகைதந்த பக்தர்கள்  கலந்துகொண்டனர் 

Related posts