பெற்றோர்களின் பங்களிப்பில் கட்டப்பட்ட தற்காலிக வகுப்பறைத் தொகுதி திறப்பு விழாவும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும்!!

காத்தான்குடி அல்ஹிறா மகா  வித்தியாலயத்தின் 2022 ஆண்டு தரம் ஆறு மாணவர்களின் பெற்றோர்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட மூன்று வகுப்பறைகளைக் கொண்ட கட்டடத்தொகுதி திறப்பு விழாவும், அம் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும்  19.05.2022 அன்றைய தினம் பாடசாலையில் இடம்பெற்றது.
 
பாடசாலை அதிபர் ஏ. எல். சப்ரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr. எம். எஸ். எம். ஜாபிர், விஷேட அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஏ. ஜி. எம். ஹக்கீம், ஜாமிஉழ்ழாபிரீன் ஜும்ஆப்பள்ளிவாயல் பொருளாளரும் கணக்காய்வாளருமான ஏ. எம். மர்சூக், சிறப்பு அதிதியாக இப்பாடசாலையின் முன்னாள் கணித பாட ஆசிரியர் வித்தியாகீர்த்தி எம். எம். அமீர் அலி  அவர்களும் கலந்துகொண்டு இவ்வகுப்பறைத்தொகுதியை திறந்து வைத்தனர்.
 
2022 இல் புதிதாக சேர்ந்துள்ள தரம் ஆறு மாணவர்களின் பெற்றோர்களினால் இப் பாடசாலையின் முக்கிய தேவையாக காணப்பட்ட வகுப்பறைப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும்முகமாக அவர்களின் நிதிப்பங்களிப்பில் மூன்று வகுப்பறைகள் இப்பாடசாலைக்கு அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தன.
 
அத்துடன் காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆப்பள்ளிவாயல், இப்பாடசாலையில் கற்ற  பழைய மாணவர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் ஏற்பாட்டில் இவ்வகுப்பறைக்கான மாணவர் கதிரை, மேசைகள்    அன்பளிப்புச்செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts