பேராசிரியர் ஏ.ஜி.ஹுசைன் இஸ்­மாயிலின் இழப்பு முஸ்லிம் சமூகத்திற்கு பேரிழப்பாகும் : எச்.எம்.எம். ஹரீஸ் (பா.உ.)

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது உபவேந்தராக ஆறு ஆண்டுகள் கடமையாற்றி (2003 – 2009), காத்திரமான பல சேவைகளை முன்னெடுத்த பேராசிரியர் ஏ.ஜி.ஹுசைன் இஸ்­மாயில் காலமானார் எனும்  செய்தி வேதனையான ஒன்றாக அமைந்துள்ளது. இவரது முதலாவது உபவேந்தர் நியமனத்தில் நானும் எமது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவருக்கு உதவியாக இருந்தோம் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்
 
அந்த செய்தியில் மேலும் முஸ்லிம் சமூகத்தின் கல்வி சொத்துக்களில் ஒருவராக மதிக்கப்படும் அன்னாரின் இழப்பு இலங்கை கல்வித்துறைக்கும், முஸ்லிம் சமூகத்திற்கும் பேரிழப்பாகும். 
 
பல மாநாடுகள், ஆய்வுகள், கருத்தரங்குகளில் கலந்து கொண்டு முஸ்லிம் சமூகத்தின் பல்வேறுபட்ட தளங்களை ஆராய்ந்த புத்திஜீவியாக இருந்த பேராசிரியர் ஏ.ஜி.ஹுசைன் இஸ்­மாயில் பல சந்தர்ப்பங்களில் முஸ்லீம் சமூகத்தின் குரலாக மாத்திரமின்றி சிறுபான்மை மக்களின் குரலாகவும் ஒலித்துள்ளார். இலங்கையில் மாத்திரமின்றி நாடுகடந்த பல புத்திஜீவிகளையும் உருவாக்கிய கல்விமானாக அவர் இருந்துள்ளார்.  நாட்டின் கல்விமுறை தொடர்பில் பல முன்னேற்றகரமான சிந்தனைகளை கொண்டிருந்த அவர் தலைவர் அஷ்ரபின் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கனவின் மேம்பாட்டுக்காக தனது உபவேந்தர் பதவிக் காலப்பகுதியில் தன்னாலான பங்களிப்பை செய்தவர். 
 
அவரது இழப்பு முஸ்லிம் சமூகத்திற்கும், இந்த நாட்டின் கல்வித்துறைக்கும் பேரிழப்பாகும். அவரது நற்செயல்களை இறைவன் பொருந்திக்கொண்டு உயரிய சுவர்க்கத்தை பரிசளிக்க துஆ செய்கிறேன். அவரது பிரிவினால் துயருற்ற அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மாணவர்கள் எல்லோருடைய துக்கத்திலும் நானும் பங்குகொள்கிறேன். பிரிவால் கஷ்டப்படும் சகலருக்கும் எனது வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

Related posts