மட்டக்களப்பின் முதுபெரும் எழுத்தாளர் மூனாக்கானாக்கு ஆரையம்பதில் கௌரவிப்பு 

கா இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பின் முதுசொம் எழுத்துலகில் மூனாக்கானா என அறியப்பட்ட ஆரையம்பதியைச் சேர்ந்த தற்போது 95 வயது நிரம்பிய கலாபூஷணம் மு.கணபதிப்பிள்ளையின் கலைச்சேவையினைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு ஆரையம்பதியில் நடைபெற்றது.
பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக மண்முனைப்பற்று தவிசாளர் சோ.மகேந்திரலிங்கம், பிரதேச செயலாளர் திருமதி ச.நமசிவாயம், கல்வியற்கல்லூரி பீடாதிபதி சி.ராஜேந்திரன் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக பேராசிரியர் செ.யோகராசா, கலாபூஷணம் செ.எதிர்மன்னசிங்கம், மட்டு தமிழ்ச்சங்க தலைவர் சைவப்புரவலர் வி.றஞ்சிதமூர்த்தி விசேட அதிதிகளாக  ஆரையம்பதி ஆற்றல் பேரவை தலைவர் பூ.பிரசாந்தன், மட்டு தமிழ்ச்சங்க செயலாளர் வே.தவராசா, மூத்தநாடக நெறியாளர் கலாபூஷணம் க.செல்லத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கவிதை, சிறுகதை, நாடகம், கூத்து என பல்துறையிலும் தடம்பதித்தவர் கிழக்கின் மண்தந்த முதுசொம் மூனாக்கானா இவரது சேவை தொடர்பான கலைஞாயிறு எனும் இதழ் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந் நூலின் அறிமுகவுரையினை மகுடம் வி.மைக்கல்கொலின் நிகழ்த்தினார். எழுத்தாளர் மு.கணபதிப்பிள்ளை தம்பதிகள் சகிதம் கிரிடம் சூட்டி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts