மட்டக்களப்பில் சமுர்த்தி வங்கிகள் கணனிமயப்படுத்தப்பட்ட சேவைக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகின்றது

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டு வரும் சமுர்த்தி சமுதாய அடிப்படையிலான வங்கிகள் கணனிமயப்படுத்தப்பட்டு துரிதமான சேவையினை வழங்கிவருகின்றன. 
 
நாட்டில் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக சமுர்த்தி உதவி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்காக இம் மாவட்டதிலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 29 சமுர்த்தி சமுதாய அபிவிருத்தி வங்கிகளும், 14 சமுர்த்தி மகா சங்கங்களும் செயற்பட்டு வருகின்றன. இச்சமுர்;த்தி வங்கிகளில் கணக்குகளைப் பேணும் பயனாளர்கிளின் தேவைகளை விரைவு படுத்தவும், கணக்குகளை மிகச் சரியாக பேணிவருவதற்குமாக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் வங்கிச் செயற்பாடுகளும், மாகா சங்கங்களின் செயற்பாடுகளும் கணனிமயப்படுத்தப்பட்டு வருகின்றது. 
 
இதனடிப்படையில் சமுர்த்தி வங்கிகளை கணனிமயப்படுத்தும் முன்னோடித் திட்டம் மட்டக்களப்பு புளியந்தீவு சமுர்த்தி வங்கிக் கிளையில் 2425 பயணாளிகளுடனும், கல்லடி வங்கிக் கிளையில் 4760 பயணாளிகளுடனும் 2013 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. 
 
இம்முன்னோடித் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு எதிர்பார்த்த விளைவுகள் கிடைக்கப் பெற்றதையடுத்து மாவட்டத்தில் காணப்படும் மாங்கேணி சமுர்;த்தி வங்கி 2197 பயணாளி கணக்குகளுடனும், கல்லாறு சமுர்;த்தி வங்கி 6268 பயணாளி கணக்குகளுடனும், கரவட்டி சமுர்;த்தி வங்கி 1130 பயணாளி கணக்குகளுடனும், பளுகாமம் சமுர்;த்தி வங்கி 4086 பயணாளி கணக்குகளுடனும், ஏறாவூர் கிழக்கு சமுர்;த்தி வங்கி 5558 பயணாளி கணக்குகளுடனும், கோறளைப்பற்று மத்தி சமுர்;த்தி வங்கி 11,848 பயணாளி கணக்குகளுடனும், புதிய காத்தான்குடி சமுர்;த்தி வங்கி 5915 பயணாளி கணக்குகளுடனுமாக மேலும் 7 வங்கிகள் இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டு கணனிமயப்படுத்தப்பட்ட சேவையினை வழங்கி வருகின்றன.
 
மேலும் இம்மாவட்டத்தில் காணப்படும் 20 சமுர்த்தி வங்கிகளும், 14 மகா சங்கங்களும் இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டு அவற்றுக்கான உத்தியோகத்தர்கள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றனர். 
 
இதுதவிர இத்திட்டத்தினை அமுல்படுத்துவதற்காக மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 12 உத்தியோகத்தர்களுக்கு கணனி விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டு ஏனைய உத்தியோகத்தர்களுக்கு பயிற்சியயளிக்க சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடவடிகன்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் திருமதி. ஏ. பாக்கியராஜா அரசாங்க தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்தார். 
 

Related posts