மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில், “நாடும், தேசமும் உலகும் அவளே” எனும் கருப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு

மட்டக்களப்பு  கிரான் கோறளைப்பற்று தெற்கு  பிரதேச செயலாளர் பிரிவின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு கிரான ரெஜி கலாசார மண்டபத்தில், நாடும், தேசமும் உலகும் அவளே எனும் கருப்பொருளுக்கமைவாக சனிக்கிழமை (27ம் திகதி) நடைபெற்றது.

கோறளைப்பற்று தெற்கு  பிரதேச செயலகமும் காவியா சுய அபிவிருத்தி பெண்கள் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந் நிகழ்வு கோறளைப்பற்று தெற்கு  பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பிரசேத்தின் சாதனையாளர்கள, சமூகசேவைகளில் சிறப்புடன் ஈடுபட்டுவரும் பெண்கள் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன், கலை நிகழ்வுகளில் பங்குகொண்ட மாணவர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகததர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஜதீஸ்குமார், காவியா பெண்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி யோகமலர் அஜித்குமார்,  பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எஸ.ரவிச்சந்திரன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள, காவியா பெண்கள் அமைப்பின் உத்தியோகத்தர்கள், மகளிர் அமைப்பின் பிரதிநிதிகள்,மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில், இப் பிரதேசத்தில் திருமணமாகி திருமணப் பதிவு செய்யாமல் வாழ்ந்துவந்த ஜந்து குடும்பங்களுக்கு திருமணப்பதிவு செய்து அவர்களுக்கு பதிவுச் சான்றும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் மகளிர் தின சிறப்பு உரைகள் இடம்பெற்றதுடன் பெண்மையை மதிக்கும் கவிதைகள், நாடகங்கள், போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன.
 

Related posts