மட்டக்களப்பு மாவட்டத்தில் 2089 பட்டதாரிகளுக்கு நியமனம்

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்~வின் நாடு முழுவதுக்குமான ஒரு இலட்சம் வேலைவாய்ப்பிணை வழங்கு விசேட வேலைத்திட்டத்தின் ஊடக வழங்குவதற்கு முன்னேடுக்கப்பட்டவேளை தேர்தல் அறிவித்ததைதொடர்ந்து  தாமதமாக்கப்பட்ட நிலையில் இருந்தவர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் இரண்டாம் திகதி வழங்கப்படவுள்ளது.
 
நியமனங்கள் வழங்கப்பட்டுகின்ற பட்டதாரிகளுக்கு தலைமைத்துவப்பயிற்சிகள் முகாமைத்துவம் தொடர்பான பயிற்சியுடன் மக்கள் தொடர்பாடல் பயிற்சி மற்றும் அரசாங்க திணைக்களங்கள்ளின் கட்டமைப்பு தொடர்பான பயிற்சிகளின் பின்னர் அரச திணைக்களங்களுக்கு இணைப்பு செய்யப்படுவர்.  
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்களுக்கு மொத்தமாக 2089 வேலையற்ற பட்டதாரிகள் இனைப்புச் செய்யப்படவுள்ளனர் உள்ளக பாதுகாப்பு உள்நாட்டு அலுவல்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் இனையத்தளத்தில் வெளியிடப்பட்ட பேர் விபரங்களின் அடிப்படையில் இந்த நியமனங்கள் இடம் பெறவுள்ளது.
 
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு 441 பேரும் காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு 111 பேரும் ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்கு 142 பேரும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்கு 480 பேரும் வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்கு 150 பேரும் பட்டிருப்பு பிரதேச செயலகத்திற்கு 103 பேரும் வவுனதீவு பிரதேச செயலகத்தில் 63 பேரும் கிரான் பிரதேச செயலகத்திற்கு 63 பேரும் வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு 116 பேரும் வாகரை பிரதேச செயலகத்திற்கு 21 பேரும் ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு 61 பேரும் செங்கலடி பிரதேச செயலகத்திற்கு 193 பேரும் ஏறாவூர் பிரதேச செயலகத்திற்கு 123 பேரும் கொறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலத்திற்கு 22 பேரும் மொத்தம் 2089 பேர் நியமத்தினை பெறவுள்ளனர்.  
 
பட்டதாரிகள் தங்களின் பிரதேச செயலகங்களுக்கு சென்று தங்களின் நியமன கடிதங்களை நேற்று முதல் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் பிரதேச செயலகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி கலாமதி பத்மராஜா மாவட்ட ஊடக பிரிவிற்கு தெரிவித்தார்.

Related posts