மட்டக்களப்பு மாவட்டத்தில் சினோபாம் தடுப்பூசி ஏற்றும் இரண்டாம் கட்ட நடவடிக்கை இன்று முன்னெடுப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில்  முன்னுரிமையளிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கான சினோபாம் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று இரண்டாம் நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
 
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு 25,000 தடுப்பு ஊசிகளில் முதல் கட்டமாக கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றுள் இரண்டாம் நாளாகிய இன்று 09.06.2021 ஆந் திகதி புதன்கிழமை 1500 தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கையானது  முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குள் தொற்றாளர்கள் அதிகமாக இனங்கானப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட பகுதிகளான திருச்செந்தூர், கல்லடி வேலூர் மற்றும்  நாவற்குடாப் பகுதிகளில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள்  குறித்த பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் ஏற்றப்பட்டது.
 
கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன்
மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் இராணுவத் தரப்பு பிரதானி 23 வது படைப்பிரிவின் கொமாண்டர் மேஜ ஜெனறல் நலின் கொஸ்வத்த,  231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் வீ.எம்.என்.எட்டியாராச்சி, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் உள்ளிட்ட துறைசார் நிபுணர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

Related posts