மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் வறட்சியில்  25005 குடும்பங்கள் பாதிப்பு மாவட்ட செயலகம் தகவல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் வறட்சியில்  25005 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மூலம் 26 இலட்சம் ரூபா நிதியில் 30ஆயிரம்லீட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியான சூழலை முகாமைத்துவம் செய்யும்இணைப்புக்குளுவின்விசேட கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் இன்று(௦ 6)  இடம்பெற்றது.இக்கூட்டத்தில்தற்போதையசூழலில்உன்னிச்சைகுடிநீர்த்திட்டத்தினால்குடிநீர் மற்றும் விவசாயபயிர்ச் செய்கைக்கு எவ்விதம்நீரைப் பகிர்ந்துகொள்வது பற்றியும் ஆராயப்பட்டது. 

இதில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின்உதவிப்பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத்,மாவட்டபாதிப்புக்கள்பற்றியஅறிக்கையினைஇக்கூட்டத்தில்சமர்பித்தார்.நீர்ப்பாசனம்,விவசாயம்,வணஜீவராசிகள்,கால்நடைஉற்பத்திசுகாதாரம்,தேசியநீர்வழங்கள்வடிகாலமைப்புசபை மற்றும் அரச திணைக்களங்களின் உயர்அதிகாரிகள்பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் வறட்சியில்  25005 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மூலம் 26 இலட்சம் ரூபா நிதியில் 30ஆயிரம்லீட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது

இத்துடன் 7723 ஏக்கர் நெல்வயலும்    629ஏக்கர் மேட்டுநிலபயிர்களும்   750நன்னீர்மீனவர்களும் கால்நடைவளர்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். காட்டுயானை தொல்லையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விசேட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts