மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான கராத்தே அங்குரார்ப்பண வைபவமும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டு துறையினை மேம்படுத்தும் முகமாக பல வேலை திட்டங்கள் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் தலைமையில்  முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில்  S.K.O விளையாட்டு கழகத்தினால் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர்  தேசிய பாடசாலையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த குறித்த கராத்தே அங்குரார்ப்பண வைபவம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்
இடம்பெற்றிருந்தது.
 
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், கராத்தே கலை பயிலுகின்ற மாணவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கராத்தே பயிற்சிக்கு தேவையான உபகரணங்களையும் இதன்போது வழங்கிவைத்துள்ளார்.
 
S.K.O விளையாட்டு கழகத்தின்  தலைமை ஆசிரியர் கே.ரீ.பிரகாஷ் தலைமையில் வின்சன்ட் தேசிய பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. முகுந்தன் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி. புள்ளைநாயகம், மண்முனை வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி. சுஜாத்தா குலேந்திரகுமார், மண்முனை மேற்கு வலயகல்வி பணிப்பாளர் திருமதி. அகிலா, மட்/ வின்சென்ட் மகளீர் தேசிய பாடசாலையின் அதிபர், புனித மிக்கேல் கல்லூரியின்  அதிபர் மற்றும் இலங்கை கராத்தே சங்கத்தின் தலைவர் சிசிரகுமார துறைசார் அதிகாரிகள் கராத்தே மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்ததுடன் மாணவர்களினால் கராத்தே தொடர்பான ஆற்றுகைகளும் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts