13 தங்கப்பதக்கங்களை பெற்ற வைத்தியர் தர்ஷிகா அவர்களுக்குப் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தினால் பாராட்டு

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் 13தங்கப்பதக்கங்களை  சுவீகரித்து சிறந்தமருத்துவபீட மாணவியாக(First class – Topper) தெரிவுசெய்யப்பட்ட    கிழக்குமாகாணத்தின் முதல் சாதனை மாணவி தணிகாசலம் தர்ஷிகாவை கிழக்குத்தமிழர் ஒன்றியத்தினர் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு 27 ஆம்திகதி அக்கரைப்பற்று மகாசக்தி கேட்போர் கூடத்தில் இடம் பெற்றதுது.

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் தலைவர் ஆ.குணசேகரம்  தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்  ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் வா.குணாளன், பொருளாளர் வை.மகேந்திரநாதன், அம்பாரைமாவட்டப் பொருளாளர் எஸ்.நகேந்திர ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Related posts