மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற ஆசிரியர்தின நிகழ்வுகள்.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினதும்,2018 வருட உயர்தர வகுப்பு மாணவர்களினதும் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் “சர்வதேச ஆசிரியர்தினம்” மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் காட்மண்ட் மண்டபத்தில் வியாழக்கிழமை(4.10.2018) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

முதலில் இன்றைய தினத்தின் கதாநாயகர்களாக திகழும் ஆசிரியர்களை மாலை அணிவித்தும்,பேண்ட் வாத்தியங்கள் இசைத்து கௌரவமாக பாடசாலைக்கு அழைத்து வந்தார்கள்.

மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முதல்வர் இராஜதுரை-பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் அதிதிகளாக ஆசிரியர்கள் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக தாவரவியல் பிரிவுத்தலைவர் ரீ.மதிவேந்தன்,மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் எந்திரி என்.சசிநந்தன்,மண்முனை கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.அருட்பிரகாசம், முன்னாள் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப்பணிப்பாளர் திருமதி.ராஜேஸ்வரி சிறிநிவாசன்,ஓய்வுநிலை ஆசிரியை திருமதி இந்திராணி புஸ்பராசா,பிரதி அதிபர்களான எஸ்.சதீஸ்வரன்,இ.இலங்கேஸ்வரன்,பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளரும்,ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பிரதி முகாமையாளருமான எந்திரி வை.கோபிநாத் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

சர்வதேச ஆசிரியர்தின நிகழ்வின்போது மங்கள விளக்கேற்றல்,வரவேற்புரை,ஆசிரியர் கீதம்,ஆசிரியர் கௌரவிப்புக்கள்,ஆசிரியர்தின ஆசிச்செய்திகள்,பேச்சுகள்,பாடல்கள்,ஆசிரியர்களின் செயல்திறன்கள்,பாடல்கள்,பேச்சுக்கள்,சிந்திக்க வைக்கும் துணுக்குகள் என்பன இடம்பெற்றதுடன் குறைந்த லீவு,பாடசாலைக்கு முந்திவரும் ஆசிரியர்கள் விஷேட பரிசுகள் வழங்கி அதிதிகளினால் கௌரவிக்கப் பெற்றார்கள்.

Related posts