மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பொறிமுறைத் திறன் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான அனர்த்த முகாமைத்துவப் பொறிமுறைத் திறன் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு நடைபெற்றது.

“பாதுகாப்பான சமூகமும், நிலையான அபிவிருத்தியும்” என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான அனர்த்த முகாமைத்துவப் பொறிமுறைத் திறன் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வொன்று  சனிக்கிழமை (06) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் விழிப்புணர்வுச் செயலமர்வில், பிரதம அதிதியாக நீர்ப்பாசன, நீரியல் வள மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளரும், தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகமுமான கலாநிதி எஸ்.அமலநாதன் கலந்து கொண்டார்.அனர்த்தப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தினையும், அனர்த்த வேளைகளில் ஊடகங்கள் செயற்பட வேண்டிய விதம்,அதற்கான செயற்திறன், வளங்களைப் பாதுகாத்தல், அனர்த்த வேளையிலான முன்னேற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன் போது விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இதன் போது, வாநிலை மற்றும், காலநிலை தொடர்பான விடயங்கள் குறித்து மட்டக்களப்பு வானிலை அவதான நிலையத்தின் பிரதான அதிகாரி எஸ்.சூரியகுமார், வெள்ள காலத்திலான முகாமைத்துவ பொறிமுறை குறித்து நீர்ப்பாசனத்திணைக்களப் பொறியியலாளர் எஸ்.நிரோஜன் ஆகியோர் விளக்கவுரைகளை வழங்கினர்.
அதே போன்று வன விலங்குகள் சார் அனர்த்தங்கள், அதன் பாதுகாப்புகள் குறித்து வன விலங்கு பரிபாலனத்திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலர் என்சுரேஸ்குமார்,அனர்த்த நிவாரணச் செயற்பாடுகள் குறித்து மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவப்பிரிவு உத்தியோகத்தர் எஸ்.சிவநாதன், மட்டக்களப்பு மாவட்டத்தின் அனர்த்தம் சார் செயற்பாடுகள் நிலைமைகள் குறித்து உதவிப்பணிப்பாளர் எம்.சி.ஏ.எம்.றியாஸ் ஆகியோரும் விளக்கங்களை வழங்கினர்.

இறுதியாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முன்னெச்சரிக்கைப் பிரிவுக்கான பிரதிப்பணிப்பாளர்  பிரதீப் கொடுப்பிலி அனர்த்த முகாமைத்துவமும்,ஊடகச் செயற்பாடு மற்றும் கட்டுப்பாடுகளும் என்ற தலைப்பில் உரையாற்றினர்.அனர்த்த அபாயத்தினை முடிந்தவரை குறைத்தல் எனும் அடிப்படையில் செயற்பட்டுவரும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் செயற்பாடுகளில் ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வும் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. 

Related posts