மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் சாதனையாளர் பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் வருடாந்த சாதனையாளர் பாராட்டு விழா மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கணபதிப்பிள்ளை-பாஸ்கரன் தலைமையில் புனித சிசிலியா பெண்கள் கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில்  செவ்வாய்க்கிழமை(23.10.2018) பிற்பகல் 2.30 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முத்துப்பண்டா அவர்களும்,விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் மேலதிக கல்விப் பணிப்பாளர் எஸ்.மனோகரன் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரனும்,கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் முன்னாள் அதிபர் வீ.லக்ஷ்மிசுந்தரம்,கவிஞர் வெல்லவூர் கோபால் எஸ்.கோபாலசிங்கம்,ஓய்வுபெற்ற ஆசிரியர் கே.பரராஜசிங்கம் மற்றும் பிரதிக்கல்வி பணிப்பாளர்கள்,உதவிக்கல்வி பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள்,கோட்டக்கல்வி பணிப்பாளர்கள்,ஊடகவியலாளர்கள்,முன்னாள் ஓய்வு கல்வி அதிகாரிகள்,அதிபர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள் கல்விரீதியான செயற்பாடுகளிலும்,இணைப்பாட விதானச்செயற்பாடுகளிலும் மாணவர்கள் தங்களின் புலமையைச் செலுத்தி, தங்களின் இலக்குகளை அடைந்தும் வெற்றியீட்டினார்கள்.இவ்வாறு வெற்றியீட்டிய 420 மாணவர்களும்,அதேபோன்று அர்ப்பணிப்பு,வினைத்திறன், விளைதிறன்,தூரநோக்கு சிந்தனை என்பனவற்றின் ஊடாக சிறப்பான கல்வியை மாணவர்களுக்கு  வித்திட்ட 69 ஆசியர்களும் பதக்கம் அணிவித்து,சான்றீதழ்கள்,ஞாபகார்த்த சின்னங்கள் வழங்கப்பட்டு அதிதிகளினால் பாராட்டி கௌரவிக்கப்பெற்றார்கள்.

இதேவேளை மட்டக்களப்பு மண்ணிற்கு பெருமை சேர்க்கும் வகையில் மும்முரமாக செயற்பட்ட 3கலைஞர்கள் அதிதிகளினால் பொன்னாடை போர்த்தி,பாராட்டி கௌரவிக்கப்பெற்றார்கள்.இந்நிகழ்விற்கு வருகைதந்த கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முத்துபண்டா மற்றும் கிழக்கு மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் எஸ்.மனோகரன் ஆகியோர்கள் வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் அவர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப் பெற்றார்கள்.

இந்நிகழ்வுகளை மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் உளவளத்துறை,தொழில் வழிகாட்டல் ஆலோசகரும்,அறிவிப்பாளருமான அழகையா ஜெயகநாதன் அவர்கள் மெல்லிசைத்தமிழில் தொகுத்து வழங்கினார்.மாணவர்கள்,ஆசிரியர்களின் சிறப்பான கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.

Related posts