மட்டு – அம்பாறையில் கால்நடைகள் கடத்தலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பண்ணையாளர்கள் கோரிக்கை

மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களில் சமீபகாலமாக ஆடு, மாடு போன்ற கால் நடைகளை கடத்திச் சென்று விற்பனை செய்யும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளது. இதனால் கால் நடைவளர்ப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, வவுணதீவு, வெல்லாவெளி, பட்டிப்பளை போன்ற பிரதேச செயலகப்பிரிவிலும் அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி, ஆலையடிவேம்பு, திருக்கோவில் போன்ற பிரதேசசெயலகப் பிரிவுகளிலும் மேய்ச்சல் தரைகளில் மேயும் கால் நடைகளை திருடி அடைக்கப்பட்ட வானகங்களில் கடத்திவரும் நபர்களினால் கால் நடை வளர்ப்பில் ஈடுபடும் நபர்களின் வாழ்வாதாரம் பாதிக்ப்பட்டுவருகின்றன.
ஆடு, மாடுகள் காணாமல் போவதினால் பல லட்சம் ரூபாவுக்கும் மேல் நஷ்டத்தினை பண்ணையாளர்கள் எதிர்நோக்கியுள்ளனர். கடந்த வியாழக்கிழமை கூட வவுணதீவு பிரதேசத்தில் 06 மாடுகள் கடத்தப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் கால் நடை கடத்தல்களை கட்டுப்படுத்த பொலிஸார் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related posts