மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு 16 ஆயிரம் கோடி ரூபா நட்டம்

தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு 16 ஆயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் எம்.ஜே.குணசிறி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த மாதம் 20ஆம் திகதி முதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள்ளேயே இந்த நட்டம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளதால் நாளொன்றுக்கான நட்டம் 700 கோடி ரூபா என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts